மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்ற மனரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, “கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த போது” ஒரு யோசனை வந்ததாகக் கூறுவதில் உண்மையிலேயே நகைச்சுவை தாண்டிய உண்மையும் இருக்கிறது. மலம் கழிக்கும் போது மூளையின் சுறுசுறுப்பு அதிகரிப்பதை […]