இன்று ஒரு ஆசனம் (68) –ஆஞ்சநேயாசனம் (Low Lunge Pose / Crescent Moon Pose)

புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுதும் செலுத்த உதவுகிறது. சக்கரங்கள் மற்றும் அவற்றின் இயக்கம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  ஆஞ்சநேயாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் […]

இன்று ஒரு ஆசனம் (30) – யோகமுத்திராசனம் (Psychic Union Pose)

யோகமுத்ரா என்பது முத்திரையை ஆசனத்தில் செய்வது. இந்த ஆசனம் மனநல ஆற்றலின் ஓட்டத்தை (Psychic energy flow) சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்புற உடலியக்கத்துக்கான மூளையின் நடவடிக்கைகளை வெளிப்புற உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. யோகமுத்திராவின் மேலும் சில பலன்கள் உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக செலுத்துகிறது. நுரையீரலை பலப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. குண்டலினி சக்தி மேலெழும்பச் […]

தமிழ்