இன்று ஒரு ஆசனம் (59) – சதுரங்க தண்டாசனம் (Four-Limbed Staff Pose / Low Plank Pose)

முந்தைய பதிவு ஒன்றில் கும்பக ஆசனம் (High Plank Pose) பற்றி பார்த்திருக்கிறோம். இன்றைய ஆசனமான சதுரங்க தண்டாசனத்தின் ஒரு வடிவமே கும்பக ஆசனம். ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் கும்பக ஆசனத்தைத் தொடர்ந்து பயின்ற பின் சதுரங்க தண்டாசனத்தைப் பழகலாம். வடமொழியில் ‘சதுர்’ என்றால் ‘நான்கு’, ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்று பொருள். ‘தண்ட’ என்பதற்குக் ‘கம்பு’ என்பது பொதுவான பொருளாக இருந்தாலும், இங்கு ‘தண்ட’ என்பது முதுகுத்தண்டைக் குறிப்பதாகும். இது ஆங்கிலத்தில் Low Plank Pose […]

இன்று ஒரு ஆசனம் (37) – காகாசனம் (Crow Pose)

காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது. மேலும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மையையும் வளர்க்கிறது […]

இன்று ஒரு ஆசனம் (27) – தண்டாசனம் (Staff Pose)

பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம்  முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது. மேலும், இந்த ஆசனம் சரியான முறையில் சுவாசிக்க பழக்குகிறது. உடலின் சக்தியோட்டத்தில் மனதை செலுத்த இந்த ஆசனம் உதவுகிறது. அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை துவக்குவது தண்டாசனத்தில் அமர்ந்துதான். தண்டாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. மார்புப் பகுதியையும் […]

இன்று ஒரு ஆசனம் (15) – சலம்ப புஜங்காசனம் (Sphinx Pose)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம்  ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். ‘சலம்பம்’ என்றால் ‘ஆதரவு’ (support). ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள். ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் […]

தமிழ்