இன்று ஒரு ஆசனம் (97) – உபவிஸ்த கோணாசனம் (Wide Legged Seated Forward Fold)

இதற்கு முன்னர் நாம் சில கோணாசன வகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உபவிஸ்த கோணாசனம். வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில் Wide Legged Seated Forward Fold என்றும் Wide Angle Seated Forward Bend என்றும் அழைக்கப்படுகிறது. உபவிஸ்த கோணாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர சக்கரங்களின் இயக்கம் […]

இன்று ஒரு ஆசனம் (56) – உத்தித திரிகோணாசனம் (Extended Triangle Pose)

நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’ என்று பொருள், அதாவது, இது காலை நன்றாக நீட்டிய நிலையில் செய்யப்படும் திரிகோணாசனம், அதாவது, உத்தித திரிகோணாசனம். இது ஆங்கிலத்தில் Extended Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது. உத்தித திரிகோணாசனத்தின் […]

இன்று ஒரு ஆசனம் (26) – அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Spinal Twist)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Half Lord of the Fishes என்றும் குறிப்பிடுவர். அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தில் முதுகெலும்பு நன்றாகத் திருப்பப்பட்டு, அதன் நெகிழ்வுத்தன்மை (flexibility) அதிகரிக்கப்படுகிறது. முதுகுத்தண்டிற்கு புத்துணர்ச்சி அளித்து அதன் செயல்பாட்டை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின்  மேலும் […]

இன்று ஒரு ஆசனம் (13) – புஜங்காசனம் (Cobra Pose)

முகம் கீழ் நோக்கிய நாய் நிலைக்கு, அதாவது அதோ முக ஸ்வானாசனத்துக்கு, புஜங்காசனம் மாற்று ஆசனமாகும். ‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது, பாம்பு படமெடுத்து நிற்கும் நிலை ஆகும். பாம்பு இரண்டு சூழ்நிலைகளில் படமெடுத்து நிற்கும். ஒன்று கோபப்பட்டுத் தாக்கத் தயார் ஆகும் போது; அடுத்து, இனச்சேர்க்கையில் ஈடுபடும்போது. இரண்டிலும் மிக உயரமாகப் படமெடுக்கும். அதன் உடலை மூன்றாகப் பிரித்தால், மூன்றாம் பகுதி வரை […]

தமிழ்