இன்று ஒரு ஆசனம் (94) – மத்ஸ்யாசனம் (Fish Pose)

சர்வாங்காசனம், ஹலாசனம், சுப்த கோணாசனம் மற்றும் பத்ம ஹலாசனம் ஆகிய ஆசனங்களில் நாம் பின்னால் வளைந்தாலும் நம் முதுகு முன்புறம் வளைந்த நிலையில்தான் இருக்கும். ஆக, இவ்வாசனங்களுக்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது மத்ஸ்யாசனம். இந்த ஆசனம் பின்னால் வளைந்த நிலையில் செய்யப்படுகிறது; இவ்வாசனத்தில் முதுகும் பின்புற வளைவு பெறுகிறது. வடமொழியில் ‘மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’ என்று பொருள். மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Fish Pose என்று […]
இன்று ஒரு ஆசனம் (71) –வீரபத்ராசனம் 1 (Warrior Pose 1)

வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1. வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது. வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது. இவ்வாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. தொடர்ந்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை […]
இன்று ஒரு ஆசனம் (31) – உஸ்ட்ராசனம் (Camel Pose)

வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம் நன்கு விரிவடைந்து நுரையீரலின் விரியும் தன்மையை ஒழுங்குப்படுத்துகிறது. அதன் மூலம், நுரையீரல்கள் பலமடைகின்றன. இதுதான் இந்த ஆசனத்தின் சிறப்பு. உஸ்ட்ராசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தோள்களை பலப்படுத்துகிறது. கழுத்து […]
இன்று ஒரு ஆசனம் (10) – நின்ற தனுராசனம் (Standing Bow Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதனால் இரத்த ஓட்டம் செழுமையடையும், நரம்பு வீரியமாகும். உடலின் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு இளமை ஓங்கியிருக்கும். இவ்வளவு உயர்ந்த நன்மைகள் நமக்கு இந்த ஆசனத்தின் மூலம் கிடைக்க என்ன காரணம்? முதலில் அதை புரிந்து கொள்வோம். முதலில் […]