இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்கட கோணாசனம். வடமொழியில் ‘உத்கட’ என்றால் ‘பலம் நிறைந்த’ மற்றும் ‘தீவிரமான’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது. இடுப்புப் பகுதியை வலுவாக்கவும் விரிக்கவும் செய்யும் உத்கட […]

இன்று ஒரு ஆசனம் (72) –வீரபத்ராசனம் 2 (Warrior Pose 2)

நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்றும் பொருளாகும். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். வீரபத்ராசனம் 2-ல் மூலாதாரம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது. மேலும், […]

இன்று ஒரு ஆசனம் (69) –அஷ்ட சந்திராசனம் (High Lunge Pose / Crescent High Lunge Pose)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள்; ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது. அஷ்ட சந்திராசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது முதுகுத் தசைகளை […]

இன்று ஒரு ஆசனம் (51) – அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம் (Half Prayer Twist Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரக சக்கரம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது. நம்முள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. தன்மதிப்பு, தன்னம்பிக்கை […]

தமிழ்