உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்கட கோணாசனம். வடமொழியில் ‘உத்கட’ என்றால் ‘பலம் நிறைந்த’ மற்றும் ‘தீவிரமான’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது.

இடுப்புப் பகுதியை வலுவாக்கவும் விரிக்கவும் செய்யும் உத்கட கோணாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இவ்வாசனத்தைப் பயில்வதால் ஆளுமை, ஆற்றல் ஆகியவைப் பெருகிறது; படைப்புத் திறன் கூடுகிறது.

உத்கட கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
 • உடல் முழுவதற்கும் ஆற்றல் அளிக்கிறது
 • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
 • இருதய நலனை பாதுகாக்கிறது
 • தொடை முதல் பாதம் வரை உறுதியாக்குகிறது
 • மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
 • சையாடிக் வலியைப் போக்குகிறது
 • இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது
 • குழந்தை பாக்கியம் ஏற்பட உதவுகிறது
 • சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது
 • உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது
 • தன்னம்பிக்கையை வளர்க்கிறது
 • மன அழுத்தத்தைப் போக்குகிறது
 • மனதை ஒருமுகப்படுத்துகிறது
செய்முறை
 • தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கிடையில் சுமார் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
 • பாதங்களை வெளிப்புறமாகத் திருப்பவும்.
 • மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பைச் சற்றுக் கீழிறக்கவும். கால் முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
 • கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.
 • 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.
குறிப்பு

தீவிர இடுப்புப் பிரச்சினை மற்றும் தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

கைகளை மேல் நோக்கித் தூக்குவதில் சிரமம் உள்ளவர்கள் மார்புக்கு முன்னால் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து வைக்கலாம்.

இன்று ஒரு ஆசனம் (77) – வசிஸ்தாசனம் (Side Plank Pose)

வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று

Read More »

இன்று ஒரு ஆசனம் (75) – விபரீத வீரபத்ராசனம் (Reverse Warrior Pose)

இதற்கு முன்னர் நாம் வீரபத்ராசனம் 1 மற்றும் வீரபத்ராசனம் 2 ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது விபரீத வீரபத்ராசனம். வடமொழியில் ‘விபரீத’ என்பதற்கு ‘மாற்று’, ‘மறுபக்கம்’ என்று பொருள். இவ்வாசனம் வீரபத்ராசனம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (74) – மயூராசனம் (Peacock Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நேற்றைய அஷ்டவக்கிராசனம் போல் கையால் உடலைத் தாங்கும் ஆசனமாகும். வடமொழியில் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்று பொருள். இவ்வாசனத்தின் நிலை மயிலை ஒத்து இருப்பதால் மட்டுமே மயூராசனம் என்று அழைக்கப்படுவதற்கான

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்