உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (77) – வசிஸ்தாசனம் (Side Plank Pose)

வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று அழைக்கப்படுகிறது.

வசிஸ்தாசனம் மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது. அன்பு, அமைதி ஆகிய பண்புகளை வளர்க்கவும், தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கவும் இவ்வாசனம் உதவுகிறது.

வசிஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது
  • வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது
  • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது
  • கால்களை பலப்படுத்துகிறது
  • உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது
  • உடலின் தாங்குதிறனை அதிகரிக்கிறது
  • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
செய்முறை
  • அதோ முக ஸ்வானாசன நிலைக்கு வரவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறு கும்பக ஆசனத்திற்கு வரவும். மூன்று அல்லது நான்கு முறை சாதாரண மூச்சில் இருக்கவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி இடது கையை தரையிலிருந்து எடுத்து உடலை பக்கவாட்டில் திருப்பவும்.
  • இடது காலை வலது காலின் மேல் வைக்கவும். இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இப்பொழுது உங்கள் தோள் மற்றும் கைகள் நேர்க்கோட்டில் இருக்கும்.
  • நேராகப் பார்க்கவும். அல்லது உயர்த்திய கை விரல்களையும் பார்க்கலாம் .
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின் இடது கையைத் தரையில் வைத்து அதோ முக ஸ்வானாசன நிலைக்கு வரவும்.
  • இப்பொழுது மாற்றுப் பக்கம் பயிலவும்.

குறிப்பு

மணிக்கட்டு, முட்டி, தோள், கழுத்து, முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

வசிஸ்தாசனத்தில் உடலை சமநிலையில் வைப்பது கடினமாக இருந்தால் மேல் உள்ள காலை மடித்து பாதத்தை கீழ் உள்ள காலுக்கு முன்னால் தரையில் வைக்கவும். முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும்.

இன்று ஒரு ஆசனம் (78) – ஏக பாத இராஜகபோடாசனம் (One-Legged King Pigeon Pose)

வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில்

Read More »

இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம்.

Read More »

இன்று ஒரு ஆசனம் (75) – விபரீத வீரபத்ராசனம் (Reverse Warrior Pose)

இதற்கு முன்னர் நாம் வீரபத்ராசனம் 1 மற்றும் வீரபத்ராசனம் 2 ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது விபரீத வீரபத்ராசனம். வடமொழியில் ‘விபரீத’ என்பதற்கு ‘மாற்று’, ‘மறுபக்கம்’ என்று பொருள். இவ்வாசனம் வீரபத்ராசனம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்