இன்று ஒரு ஆசனம் (50) – உத்கடாசனம் (Chair Pose)

நேற்று நாம் பார்த்தது அர்த்த உத்கடாசனம். அதன் முழுமையான வடிவமான உத்கடாசனத்தை இன்று பார்க்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். முழுமையான உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள்.
இன்று ஒரு ஆசனம் (23) – சுப்த வஜ்ஜிராசனம் (Supine Thunderbolt Pose)

வஜ்ஜிராசனம் பற்றி முன்பே பார்த்திருப்போம். வஜ்ஜிராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ஜிராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’ என்று அர்த்தம். ஆக, இது படுத்த நிலையில் வஜ்ஜிராசனம் செய்வதாகும். வஜ்ஜிராசனம் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். வஜ்ஜிராசனம் போலவே சுப்த வஜ்ஜிராசனமும் சீரணக் கோளாறுகளை சீர் செய்து சீரண உறுப்புகளை சரியாக இயங்க வைக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் […]
இன்று ஒரு ஆசனம் (22) – வீராசனம் (Hero Pose)

பெயரிலேயே புரிந்திருக்கும், இது வீரம் பெறக் கூடிய ஆசனம். பயத்திற்கு எதிர்ப்பதம் வீரம். பொதுவாக பயம் அதிகமானால் கை, கால்கள் நடுங்கும். பதட்டமும் கூடவே தொற்றிக் கொள்ளும். அதன் எதிர்விளைவாக கோபமும் வரும். தொடர்ந்து பல பிரச்சினைகளை கொண்டு வரும். நாம் பலமானவர்களாக இல்லாதிருப்பதாக எண்ணிக் கொள்வதாலேயே இவையெல்லாம் வருகிறது. அந்த பயத்தைப் போக்கி பலமானவர்களாக நம்மை உணர வைப்பது இந்த வீராசனம். எப்படி? இந்த நிலையை தொடர்ந்து செய்யும் போது கணுக்கால்கள், மூட்டுகள், இடுப்பு, கழுத்து […]