உடல் மன ஆரோக்கியம்

சோர்வாக இருக்கும் போது பயில 5 அற்புத பலன்கள் தரும் ஆசனங்கள்

சோர்வாக உணரும் போதெல்லாம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதான் தேவை என்பதல்ல. சில சமயங்களில், போதுமான இரத்த ஓட்டம் மற்றும் பிராண ஓட்டம் இல்லாததாலோ, மன அழுத்தத்தாலோ நீண்ட நேரத்திற்கு அமர்ந்து பணி செய்வதாலோ சோர்வு ஏற்படும். இந்த சோர்வைப் போக்க காபி போன்ற பானங்கள் தேவையில்லை. உடலுக்கு இயல்பான ஆற்றலை மீட்டுத் தர மென்மையான ஆசனங்கள் சிலவற்றைப் பயின்று புத்துணர்ச்சி பெறலாம்.

சோர்வைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள்

சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி ஊட்டக் கூடிய சிறந்த ஆசனங்கள் இதோ:

1) பாலாசனம்

பாலாசனம் முதுகு மற்றும் தோள்களின் இறுக்கத்தைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தைப் போக்க இவ்வாசனம் பெரிதும் உதவுகிறது. 

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) விபரீதகரணீ

விபரீதகரணீ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கால்களின் அசதியைப் போக்க உதவுகிறது. கடினமான வேலை நாளின் முடிவில் புத்துணர்ச்சி பெற விபரீதகரணீ அருமையான ஆசனமாகும். 

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) சேதுபந்தாசனம்

மார்புப் பகுதியை விரிவுப்படுத்தவும் முதுகுத்தண்டு இயக்கத்தைத் தூண்டவும் சேதுபந்தாசனம் உதவுகிறது. தவறான முறையில் நிற்றல் மற்றும் அமர்தல் ஆகியவற்றால் ஏற்படும் சோர்வைப் போக்கவும் நீண்ட நேரம் அமர்வதால் உண்டாகும் அசதியைப் போக்கவும் சேதுபந்தாசனம் உதவுகிறது.

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) மர்ஜரியாசனம் – பிடிலாசனம்

ஒரு தொடராக மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனத்தைப் பழகும் போது முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலின் இறுக்கம் நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது.

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Getting ready for winter? Check out these stunning collections:

NEW ARRIVALS

5) ஓய்வு நிலை ஆசனம் (சாந்தி ஆசனம் / சவாசனம்)

ஓய்வு நிலையில் இருப்பது உடலும் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் ஓய்வெடுப்பது ஆகும். மூச்சில் கவனம் வைத்து ஓய்வு நிலை ஆசனத்தைப் பயிலும் போது புத்துணர்வும் மன அமைதியும் ஏற்படும்.

ஓய்வு நிலை ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

முக்கிய குறிப்புகள்

  • சோர்வாக இருக்கும் போது கடினமான ஆசனங்கள் பழகுவதைத் தவிர்க்கவும்.
  • அமைதியான சூழலில் பயிலவும்.
  • உங்கள் உடல்மொழியைக் கவனித்து அதற்கு ஏற்றபடி பயில்வதே சிறந்தது.

யோகப்பயிற்சி உங்கள் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி கொடுப்பது மட்டுமல்லாமல் நல்ல ஓய்வையும் அளிக்க வல்லது.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்