உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (64) – சக்ராசனம் (Wheel Pose)

பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது.

சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான எட்டு சக்கரங்களையும் (ஏழு முக்கிய சக்கரங்கள்தானே என்று நினைக்கிறீர்களா, விரைவில் இது பற்றி எழுதுவோம்) தூண்டுவதால், இவ்வாசனம் மிகவும் வலிமையான ஆசனமாகவும் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஆசனமாகவும் ஆகிறது. சக்ராசனம் பழகுவதால் முழு உடலுக்குமே அற்புதமான அளவில் பயிற்சி கிடைக்கிறது.

Wheel Pose benefits

சக்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
 • உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
 • முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகெலும்பை பலப்படுத்தவும் செய்கிறது
 • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
 • தோள்களை விரிக்கிறது
 • நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
 • இருதயத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
 • உடல் முழுமையையும் உறுதியாக்குகிறது
 • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
 • கால்களை நீட்சியடையச் செய்வதோடு கால் தசைகளை பலப்படுத்தவும் செய்கிறது
 • இளமையான தோற்றத்தைப் பராமரிக்கிறது
செய்முறை
 • தரையில் படுக்கவும்.
 • கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்துக்கு அருகில் வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும்.
 • கைகளை உயர்த்தி, தோள்களுக்கு பின் புறமாகத் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.
 • உள்ளங்கைகளையும் பாதங்களையும் தரையில் நன்றாக ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை முடிந்த வரை மேல் நோக்கி உயர்த்தவும்.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
 • மெதுவாக தரையில் படுத்து கால்களை நீட்டவும்.
குறிப்பு

தீவிரமான முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் சக்ராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (65) – பார்சுவ பாலாசனம் (Thread the Needle Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘பால’ என்றால் ‘குழந்தை’ என்று பொருள். இவ்வாசனத்தில் பாலாசன நிலை அல்லது பாலாசன நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் மேலுடலைப் பக்கவாட்டில் திருப்பி செய்வதால் இந்த ஆசனம் பார்சுவ

Read More »

இன்று ஒரு ஆசனம் (63) – கருடாசனம் (Eagle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் விருஷாசனம் போன்றே ஒற்றைக் காலில் நின்று செய்யப்படுவது கருடாசனம். வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது. விருஷாசனம்

Read More »
Extended-Hand-to-Big-Toe-Pose

இன்று ஒரு ஆசனம் (62) – உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் (Extended Hand to Big Toe Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் நாம் பாதாங்குஸ்தாசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். நின்று செய்யும் அந்த ஆசனத்தில் நாம் முன்னால் குனிந்து கால் பெருவிரல்களைப் பிடிப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தில் நாம் நின்றவாறு

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்