சில காலைப் பொழுதுகள் சோர்வாக நமக்கு விடிவதுண்டு. இரவு தாமதமாக உணவு அருந்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் இவ்வாறு நேரலாம். மென்மையான, காலை சோர்வைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள் பயில்வது சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக்கும். இங்கு தேவைப்படுவது தீவிரமான யோகப்பயிற்சி அல்ல, மென்மையான, உடல்-மன ஒருங்கிணைப்போடு கூடிய பயிற்சி.
காலை நேர சோர்வுக்கான முக்கிய காரணங்கள்
காலையில் எழும்போதே சோர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
- தொடர்ந்து சரியான தூக்கமின்மை
- இரவு உணவை தாமதமாக உண்ணுதல்
- செரிமானக் கோளாறு
- மன அழுத்தம்
- உடற்பயிற்சியின்மை
காலை நேர அசதியைப் போக்க உதவும் அற்புத ஆசனங்கள்
1) தாடாசனம்

தாடாசனம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, தசைகளில் இருக்கும் இறுக்கத்தைப் போக்க உதவுகிறது.
தாடாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) உத்தானாசனம்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் உத்தானாசனம், முதுகுப்பகுதியின் இறுக்கத்தைப் போக்குகிறது.
உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) புஜங்காசனம்

புஜங்காசனம் முதுகுத்தண்டு இயக்கத்தைத் தூண்டுகிறது. நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது. புஜங்காசனம் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பை உண்டாக்குகிறது.
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஆழ்ந்த மூச்சு முறை
அமைதியாக அமர்ந்து கொண்டு சிறிது நேரம் நிதானமாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி சுவாசத்தில் கவனத்தை வைக்கவும். இது மனதை அமைதிப்படுத்துவதோடு உடலுக்கும் மனதுக்கும் சுறுசுறுப்பை அளிக்கிறது.
காலையில் சுறுசுறுப்பாக எழுந்திருக்க சில உதவிக் குறிப்புகள்:
- தாமதமாக இரவு உணவு உண்பதை தவிர்க்கவும்.
- தூக்கத்துக்கென்று முறையாக நேரம் அமைத்துக் கொள்ளவும்.
- சமச்சீரான உணவு அருந்தவும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்.
இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT




