உடல் மன ஆரோக்கியம்

யோகா பயில்வதற்கான விதிமுறைகள்

யோகா பயில்வதற்கான விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் வைத்து ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  • காலியான வயிறுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் செய்வது இன்னும் சிறப்பு. ஒரு கோப்பை நீர் அருந்தி விட்டு பயிற்சியைத் தொடங்கவும். காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தினால் குறைந்தது அரை மணி நேரம் பொறுத்துத்தான் ஆசனப் பயிற்சி செய்ய வேண்டும். உணவு உண்ட பின் பயிற்சி செய்வதாக இருந்தால் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் கழித்துத்தான் யோகாசனம் செய்ய வேண்டும்.
  • யோகாசனப் பயிற்சி செய்ததும் 20 நிமிடங்கள் வரை தண்ணீர் உட்பட எதையும் குடிக்கவோ உண்ணவோ கூடாது.
  • குளித்தப் பின் யோகா செய்வதாக இருந்தால் 10 நிமிட இடைவெளி விட வேண்டும். யோகா செய்த பின் குளிப்பதாக இருந்தால் அரை மணி நேரம் கழித்துத்தான் குளிக்க வேண்டும்.
  • வெறும் தரையில் யோகாசனம் பயிலக் கூடாது. விரிப்பு அல்லது yoga mat-ஐ பயன்படுத்தவும்.
  • காற்றோட்டமான அறையில் ஆசனம் பயிலவும். ஆசனம் பயிலும் போது குளிர்சாதனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • நடைப்பயிற்சி, மற்ற பயிற்சிகள் செய்த பின் ஆசனம் செய்யக் கூடாது. மெதுவான நடைப்பயிற்சி செய்வதாக இருந்தால் குறைந்தது அரை மணி நேரம் கழித்து ஆசனம் செய்யலாம். பளு தூக்குதல் போன்ற கடினமான பயிற்சி செய்வதாக இருந்தால் ஆசனம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேர இடைவெளி தேவை.
  • ஆசனம் பயிலும் போது இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.
  • யோகாசனப் பயிற்சியின் போது கண்ணாடி போடுபவர்கள் அதைக் கழற்றி விட்டு செய்ய வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவத்துக்கான ஆசனங்களை செய்தாலே போதுமானது. அதை நிபுணர்களின் மேற்பார்வையில் பயில்வது நல்லது.
  • யோகப் பயிற்சியை எந்த வயதினரும் செய்யலாம். நீங்கள் பயிலும் நேரத்தில் உங்கள் குழந்தைகளை அனுமதித்து அவர்களை இயல்பாக பயில விடுங்கள். எந்த கடினமான ஆசனத்தையும் பயில ஊக்குவிக்காதீர்கள்.
  • உடலுறவுக்குப் பின் குறைந்தது அய்ந்து மணி நேர இடைவெளி விட்டு ஆசனம் பயிலவும்.
  • ஒவ்வொரு நாள் ஆசனப் பயிற்சி முடிந்ததும் கண்டிப்பாக சவாசனத்தில் ஓய்வெடுக்க வேண்டும். ஒரு மணி நேரப் பயிற்சி செய்தால் 10 நிமிடங்கள் சவாசனத்தில் இருக்க வேண்டும்.
  • உடல் நலக் குறைவு, தலைவலி, பேதி போன்ற உபாதைகள் இருக்கும் போது ஆசனப் பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். அம்மாதிரியான நாட்களில் சவாசனத்தில் ஓய்வு எடுக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்