இன்று ஒரு ஆசனம் (100) – சிரசாசனம் (Headstand)

‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் 100-வது ஆசனமாக நாம் பார்க்கவிருக்கும் சிரசாசனம், ‘ஆசனங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.. வடமொழியில் ‘சிரச’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Headstand என்று அழைக்கப்படுகிறது. (ஆசனங்களின் அரசி என அழைக்கப்படும் சர்வாங்காசனத்தைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). புவியீர்ப்பு ஆற்றலுக்கு எதிரான நிலையில் செய்யப்படும் சிரசாசனம் அற்புதமான பலன்களை அளிக்கக் கூடியது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா […]
இன்று ஒரு ஆசனம் (96) – இராஜ புஜங்காசனம் (King Cobra Pose)

இதற்கு முன்னர் நாம் புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று பொருள். புஜங்காசனம் பற்றிய பதிவில் பாம்பின் பெயர் சூட்டப்பட்டதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (புஜங்காசனம் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இராஜ புஜங்காசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. எனவே, இவ்வாசனம் பயில்வதால் […]
இன்று ஒரு ஆசனம் (80) – இராஜ கபோடாசனம் (King Pigeon Pose)

கட ந்த இரண்டு நாட்களில் நாம் ஏக பாத இராஜ கபோடாசனம் மற்றும் அதோ முக கபோடாசனம் ஆகிய இரண்டு ஆசனங்களைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம். பின் வளையும் ஆசனங்களில் இது அற்புதமான மற்றும் சவாலான ஒரு ஆசனமாகும். நாம் முன்னரே அறிந்தது போல் ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ என்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்றும் பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் இராஜ கபோடாசனம் என்று அழைக்கப்படுகிறது. இராஜ கபோடாசனத்தில் அனாகதம், விசுத்தி, […]
இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)

‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை எலும்பிலிருந்து தாடை வரை இருக்கும் தசைகளை உறுதியாக்குகிறது. மூலாதாரம், ஜாலந்தரம் மற்றும் உட்டியாண பந்தங்களின் இயக்கத்தை செம்மையாக்கி உடம்பில் பிராண சக்தி ஓட்டத்தை சீர்ப்படுத்துகிற்து. சிங்காசனத்தின் மேலும் சில பலன்கள் நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது. நோய் எதிர்க்கும் […]
இன்று ஒரு ஆசனம் (19) – தனுராசனம் (Bow Pose)

நாம் முன்னர் நின்ற தனுராசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் பார்க்க இருப்பது, பிடிலாசனத்தின் மாற்று ஆசனமான தனுராசனம். இதை படுத்த நிலையில் செய்ய வேண்டும். நின்ற தனுராசனம் போலவே தனுராசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கலாம். தனுராசனம் ஆங்கிலத்தில் Bow Pose என்று அழைக்கப்படுகிறது. தனுராசனத்தின் மேலும் சில பலன்கள் நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது. வயிற்று […]