வேலை-வாழ்க்கை சமநிலை

சூரிய உதயத்திற்கு முன் கண் விழித்து, பயிற்சி செய்து, சமைத்து, சாப்பிட்டு, அல்லது சமைக்காமல் சாப்பிட்டு, அலுவலக வேலையில் அன்றைய நாளுக்கான target, deadline, last date மற்றும் என்ன பெயர் எல்லாம் இருக்கிறதோ அத்தனையும் வைத்து வேலையின் பரபரப்பில் மூழ்குபவர்களில் நீங்களும் ஒருவரென்றால் ஒரு நொடி கணினியிலிருந்து விரல்களை எடுத்துக் கையை உயர்த்துங்கள். இருங்கள், நானும் உயர்த்திக் கொள்கிறேன். பரபரப்பான பணிச்சுமையும் சவாலான வேலைகளும் பல வேளைகளில் மனதுக்குப் பிடித்தாலும் நாம் அந்த வேலையின் போக்கில் […]

வேப்ப மரத்தின் நன்மைகள்

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,  மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்க செடி / மரங்கள் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இதிலிருந்தே தொன்மையான சித்த மருத்துவத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். பார்க்கும் போதே கண்களுக்கும் மனதிற்கும் இதமாக இருப்பதோடு எண்ணற்ற பலன்களை அளிப்பதாகவும், அதன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் […]

பிராண முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று பிராண முத்திரை. பிராண முத்திரையைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்திற்கு இன்றியமையாத பிராண சக்தி, உடலில் சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய முடியும். பிராண சக்தி குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் பிராண சக்தி குறைவாக இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் சில: சோர்வு அசதி பலவீனம் குறைவான நோய் எதிர்ப்புத் திறன் கண் பார்வைக் கோளாறுகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் சீரண கோளாறுகள் சீரற்ற இரத்த ஓட்டம் செயல்களில் […]

தூய்மைப்படுத்தும் முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு வேளைக்கு 15 நிமிடமாக ஒரு நாளில் மூன்று வேளையாகவும் தூய்மைப்படுத்தும் முத்திரையைப் பழகலாம். உடலிலிருக்கும் நச்சுகளை இம்முத்திரையின் மூலம் அகற்றிய பின் பிற முத்திரைகளைத் தேவைக்கேற்பப் பழகலாம். தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்வது எப்படி? முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும். கை […]

முத்திரைகள் குறித்த கேள்வி பதில்

பல்வேறு முத்திரைகளின் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்ப்பதற்கு முன், முத்திரை குறித்த சில முக்கியமான கேள்விகளையும் அவற்றிற்கான விடைகளையும் பார்க்கலாம். 1) முத்திரை பயிற்சிகளை அனைத்து வயதினரும் செய்யலாமா? ஆறு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முத்திரைகளைப் பயிலலாம். ஆயினும் ஆறிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ளவர்கள் குறிப்பிட்ட சில முத்திரைகள் மட்டுமே பயிலலாம். முத்திரை பயில்வதற்கு உச்ச வயது வரம்பு இல்லை. 2) முத்திரை பயிற்சிகளை எப்போது செய்யலாம்? முத்திரை பயிற்சிகளை அதிகாலை வேளைகளில் செய்வது […]

தமிழ்