ஆசனம் மற்றும் முத்திரை பயிற்சிகளைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்தை செம்மையாகப் பேணலாம் என்று பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. முந்தைய பதிவொன்றில் நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள் பற்றி பார்த்திருந்தோம். இன்று நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் முத்திரைகள்

குறிப்பிட்ட முத்திரைகளைப் பயில்வதன் மூலம் உடலின் நோய் எதிர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். இதோ, உங்களுக்காக:

1) பிராண முத்திரை

Prana Mudra

பிராண முத்திரை செய்முறை மற்றும் பலன்கள் குறித்து அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) லிங்க முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். 
  • இரண்டு உள்ளங்கைகளையும் மார்புக்கு நேராக வணக்கம் சொல்வது போல் சேர்த்து வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கவும். 
  • இடது கை பெருவிரலை மட்டும் உயர்த்தி வலது கை பெருவிரல் மற்றும் சுட்டும் விரலாலே அதைச் சுற்றிப் பிடிக்கவும். 
  • கண்களை மூடியவாறு முத்திரையில் கவனம் வைக்கவும். 

லிங்க முத்திரையை 30 நிமிடங்கள் பயிலவும். அல்லது வேளைக்கு 10 நிமிடங்களாக மூன்று வேளை பயிலவும். 

3) அபானவாயு முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • சுட்டும் விரலை மடக்கி கட்டை விரலின் கீழ் வைக்கவும்.
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் நுனிகளையும் கட்டை விரல் நுனியையும் ஒன்றாக வைக்கவும்.
  • சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும். 
  •  ஒரு நாளில் அரை மணி நேரம் இம்முத்திரையைப் பயிலவும். வேளைக்கு 15 நிமிடம் என காலை மற்றும் மாலையில் இம்முத்திரையைப் பழகலாம்.  

4) வாயு முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். 
  • சுட்டும் விரலை மடக்கி பெருவிரலின் கீழுள்ள பகுதியில் வைக்கவும். 
  • பெருவிரலை மடித்து சுட்டும் விரலின் மேல் வைக்கவும்.
  • மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டிக் கொள்ளவும்.
  • 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையை பயிலவும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் முத்திரைகளைத் தொடர்ந்து பழகி வர சிறந்த நலமோடு வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்