முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும் அபாரமானவை.

மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்

மஞ்சள் எசன்சியல் எண்ணெய் தரும் நன்மைகளில் முக்கியமான சில:

  • சளி, இருமலைப் போக்குகிறது.
  • வாயுத் தொல்லையைப் போக்குகிறது; செரிமானத்தைத் தூண்டுகிறது.
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது.
  • பரு, கரும்புள்ளிகளைப் போக்க உதவுகிறது. சோரியாஸிஸ் போன்ற சருமத் தொடர்பான பிரச்சினைகளைப் போக்க உதவுவதாக ஆய்வு ஒன்று அறிவித்திருக்கிறது.
  • சரும நிறத்தை மேம்படுத்துகிறது.
  • சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குகிறது; தோற்றத்தில் இளமையைப் பராமரிக்கிறது.
  • பித்த வெடிப்பைப் போக்குகிறது.
  • பொடுகைப் போக்குகிறது; தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மூட்டு வலியைப் போக்குகிறது.
  • தசை வலியை நீக்குகிறது.
  • கல்லீரல் நலனைப் பாதுகாக்கிறது.
  • மூளைத் திறனை அதிகப்படுத்துகிறது; நினைவாற்றலை மேம்படுத்தி, நினைவாற்றல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கிறது.
  • மார்பகப் புற்று நோயைத் தவிர்க்க உதவுகிறது.
  • இரத்தப் புற்று நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
  • பெருங்குடல் புற்று நோயைத் தவிர்க்க உதவுகிறது.
  • தூக்கமின்மையைப் போக்குகிறது.
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது; மன அமைதியை வளர்க்கிறது.
மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பக்க விளைவுகள்

பொதுவாக மஞ்சள் எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு குமட்டல், வயிற்று உபாதை, தலைச்சுற்றல் ஏற்படலாம்.

எந்த ஒரு எசன்சியல் எண்ணெய்யையும் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தில் நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்