உடல் மன ஆரோக்கியம்

சாமை கிச்சடி

சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இன்றைய பதிவில் சாமை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சாமை கிச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

சாமை – ஒரு ஆழாக்கு

வெங்காயம் – 2, நடுத்தர அளவில்

தக்காளி – 2, நடுத்தர அளவில்

உருளைக்கிழங்கு – 2, நடுத்தர அளவில்

கேரட் – 1 அல்லது 2

பீன்ஸ் – சுமார் 5 முதல் 10 வரை

குடைமிளகாய் – 1, பெரியது

பச்சை பட்டாணி – 1 கைப்பிடி (என்னிடம் அன்று இல்லாததால் சேர்க்கவில்லை)

பச்சை மிளகாய் – 2 அல்லது 3

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கொத்துமல்லி – சிறிதளவு

தண்ணீர் – 2 ஆழாக்கு

எலுமிச்சை சாறு – சிறிதளவு (தேவைப்பட்டால்)

தாளிக்க:

நெய் – தேவையான அளவு

கடுகு – 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

ஏலக்காய் – 1 அல்லது 2

இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

அக்கா பெண் பரிந்துரையில் OPOS-ல் சமைக்கத் தொடங்கியதிலிருந்து, சாதாரண சமையல் அரிதாகிப் போயிருக்கிறது. ஆனால், இங்கு விவரிப்பதெல்லாம் வழக்கமான சமையல் முறைதான். OPOS எனக்கு வாணலித் தேவையைக் குறைத்து விட்டாலும் பழைய மண் வாணலி உடைந்து போனதால், ஆன்லைனில் தேடத் தொடங்கியதில் என்னை ஈர்த்தது இது. 

அதே நேரத்தில் கவர்ந்த இன்னொன்றை குழந்தைகளின் சொப்பு சாமான்களாகவும் பயன்படுத்தலாம். வீட்டை அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம். 

செய்முறை

சாமை கிச்சடி

  • சாமையைத் தண்ணீரில் நன்றாக அலசவும். 
  • வெறும் வாணலியில் சுத்தம் செய்த சாமையை வாசம் வரும்வரை வறுக்கவும்.
  • வறுத்த சாமையை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். 
  • நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
  • குடைமிளகாய்த் தவிர பிற காய்களை முதலில் சேர்த்து, மஞ்சள் தூளும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • காய்கள் பாதி வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் ஊற வைத்த சாமையை நன்றாகப் பிழந்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும். 
  • தண்ணீர் வற்றியதும் தட்டுப் போட்டு மூடி, தீயைக் குறைத்து மேலும் சிறிது நேரம் சமைக்கவும். 
  • சாமை வெந்ததும் கொத்துமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  • தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

குறிப்பு:

சாமை கிச்சடி உதிரியாக வேண்டுமென்றால் 1:2 என்ற கணக்கில் தண்ணீர் போதும். குழைவாக வேண்டுமென்றால் 1:3 என்ற கணக்கிலோ அதற்குச் சற்று அதிகமாகவோ சேர்க்கலாம்.

உலர்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால், வேக வைத்தப் பின் சேர்க்கவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்