உலகளவில், பிராந்திய அளவில் மற்றும் தேசிய அளவில் கடந்த 30 வருடங்களில் பெண்களிடையே கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல், அதனால் பாதிப்புகள் ஏற்படுதல் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை கடந்த வருடமான 2022-ல் Frontiers வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வு முடிவின்படி, கடந்த 30 வருடங்களில் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல் 65% -க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இன்று கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்.
கருப்பை நார்த்திசுக்கட்டி உருவாகக் காரணங்களும் அறிகுறிகளும்
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான காரணங்கள் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. பொதுவாக, குடும்பத்தின் முந்தைய தலைமுறையினரிடையே இந்த பிரச்சினை காணப்படுதல் மற்றும் ஹார்மோன் பிரச்சினை ஆகியவற்றால் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக வைட்டமின் D குறைப்பாட்டிற்கும் கருப்பை நார்த்திசுக்கட்டி உருவாக்கத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.
தொடர் மன அழுத்தத்தினாலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாகலாம் என்று ஆய்வுகள் அறிவிக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைக்க முடியலாம் என்று ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்
கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கான அறிகுறிகளில் சில:
- மாதவிடாய் காலத்தில் அதீத உதிரப் போக்கு
- மாதவிடாயின் காலம் நீண்டிருத்தல்
- அடுத்தடுத்த மாதவிடாய் காலங்களுக்கு இடையே உதிரப் போக்கு
- மாதவிடாயின் போது அதிக வலி
யோகப் பயிற்சி எப்படி கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவுகிறது?
யோகாசனம் மற்றும் பிராணாயாமப் பயிற்சியின் உதவியால் கருப்பை நார்த்திசுக்கட்டி போக்கப்படுவது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. யோகப்பயிற்சியின் மூலம் ஹார்மோன் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன. மன அழுத்தத்தைப் போக்கவும் யோகப்பயிற்சி உதவுகிறது.
மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டும் ஆசனங்கள் கருப்பை சார்ந்த குறைபாடுகள் உட்பட மறு உற்பத்தி உறுப்புகளின் குறைபாடுகளைப் போக்கவும், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் ஆசனங்கள்
1) உத்தானாசனம்
உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) திரிகோணாசனம்
திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) பரிவ்ருத்த திரிகோணாசனம்
பரிவ்ருத்த திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) நவாசனம்
நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) சுப்த வஜ்ஜிராசனம்
சுப்த வஜ்ஜிராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச்செல்லவும்.
8) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) புஜங்காசனம்
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) தனுராசனம்
தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள் பயிற்சியுடன் கபாலபாதி, அனுலோம் விலோம், பிராமரி ஆகிய பிராணாயாம வகைகளை யோகா நிபுணரின் மேற்பார்வையில் பயில்வது சிறந்த பலன்களைத் தரும்.