உடல் மன ஆரோக்கியம்

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு online வகுப்புகளால் stress அதிகம்’ என்பது பெரும்பாலான வீடுகளில் கேட்கும் குரலாக இருக்கிறது. எந்த பிரச்சினையிலும் மன அழுத்தத்தை அண்ட விடாதவர்கள் கூட ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போதும் வரும் பதிவு செய்யப்பட்ட கொரோனா தகவல்களைக் கேட்டால் stress ஆகிவிடுவார்கள். ஆக, கொரோனாவினால்தான் மன அழுத்தம் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

சமீபத்திய மாதங்களில் மன அழுத்தத்திற்கு கொரோனா நிச்சயமாக ஒரு பெரும் காரணமாக இருந்தாலும் சுமார் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை முறை மாற்றங்களின் விளைவாக, மன அழுத்தம் மெல்ல தன் ஆதிக்கத்தைப் பரவலாக்கத் தொடங்கி விட்டது.

மன அழுத்தம், தன்மை, சூழல், அளவுக்கு ஏற்ப நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரக் கூடியது. மனிதன் தோன்றிய காலம் முதலே stress மனிதனில் இயல்பாக இருந்திருக்கும். வேட்டையாடி சமூகத்தின் சூழல் தரும் சவால்களில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு மன அழுத்தத்தின் தன்மையும், விளைவுகளும் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது.

ஆனால், மன அழுத்தம் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை அளிக்கக் கூடியதாக, சமூகத்தில் பரவலாக பலரையும் பாதிக்கக் கூடியதான ஒன்றாக ஆனது சமீபத்திய வருடங்களில்தான். 1950 மற்றும் 1960-களின் காலக்கட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வு என்பது அபூர்வமனதாக இருந்தது போய் 21-ம் நூற்றாண்டிலே, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நோய்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

மன அழுத்தம் எப்படி பாதிக்கிறது

Stress என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும். ஒரு சிக்கலான சூழலில், stress hormones வெளிவருவதால் உங்களின் இருதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடலில் பிராணவாயு ஓட்டம் அதிகரிக்கிறது, உங்கள் நோய் எதிர்க்கும் திறன் தூண்டப்பட்டு உங்கள் உடலையும் மனதையும் சிக்கலை துணிவாக எதிர்கொள்ளவும் வெல்லவும் வைக்கிறது. இவ்வாறான திடீர் சூழல் காரணமாக உயரும் stress hormone அளவு அந்நிலை மாறியதும் இயல்பான அளவுக்கு வந்து விடுகிறது. விளையாட்டுப் போட்டியில் ஆடும்பொழுது ஆட்ட இறுதி நிமிடங்களில் ஏற்படும் தற்காலிக stress-ஐ இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். ஆனால், நாள்பட்ட மன அழுத்தம், தீவிர மன அழுத்தம் அல்லது அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் என்பது தொடர்ந்து stress hormone-களை வெளியிட வைக்கிறது. இதன் காரணமாக பல்வேறு எதிர்மறை பாதிப்புகள் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தினால் ஏற்படும் உடல், மன நல பாதிப்புகள்

மன அழுத்தத்தினால் ஏற்படும் உடல், மன நல பாதிப்புகளில் சில:

  • தலைவலி
  • சீரண கோளாறு
  • தூக்கமின்மை
  • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகள்
  • அதிக இரத்த அழுத்தம்
  • இருதய கோளாறுகள்
  • நோய் எதிர்ப்புத் திறன் குறைதல்
  • வயிற்று புண் உள்ளிட்ட வயிற்று உபாதைகள்
  • சர்க்கரை குறைப்பாடுகள்
  • உடல் எடை மாற்றம்
  • கவனக் குறைப்பாடு
  • சமூகத்துடன் ஒன்றாமை
  • தன்னம்பிக்கை குறைதல்
  • மனநிலை மாற்றங்கள்
  • மனச் சோர்வு (depression)
  • சகிப்புத் தன்மை குறைதல்
  • சோக உணர்வு

யோகா எவ்வாறு மன அழுத்தத்தைப் போக்குகிறது

யோகாசனம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. உணர்வுகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு உணர்வுகளைக் கையாளும் திறனை மேம்படுத்துகிறது.

யோகப்பயிற்சி செய்வதால் ஒருவர் தாம் செய்யும் வேலையில் மனதை ஈடுபடுத்துவதற்கு மனதைப் பழக்க முடியும். இதை ஆங்கிலத்தில் ‘being in the moment’ அல்லது ‘mindfulness’ என்று குறிப்பிடலாம். எப்பொழுது மனம், செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறதோ, அப்பொழுதே மன அழுத்தத்தை உருவாக்கும் காரணங்களிலிருந்து மனம் விலகி விடுகிறது.

யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது. சிந்தனையில் தெளிவு பிறக்கிறது.

யோகப்பயிற்சி தூக்கமின்மையைப் போக்குகிறது. உடல், மன நலத்துக்கு தூக்கத்தின் இன்றியமையாமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. மன அழுத்தத்தின் விளைவுகளில் ஒன்றான தூக்கமின்மை, மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாகி விடும். தொடர்ந்து யோகாசன பயிற்சி செய்து வர தூக்கமின்மை நீங்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

யோகா மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகளை செம்மையாக்குகிறது. தன்னிச்சையாக மூச்சு விடுவதைப் போல் அல்லாமல் பிராணாயாமத்தில் கவனத்தைக் குவித்து மூச்சை நிதானமாக இழுத்து விடும் சில பிராணாயாம வகைகள் parasympathetic nervous system-ஐ தூண்டுகின்றன. Sympathetic nervous system உடலை fight or flight mode-ற்குத் தயார் செய்கிறது என்றால் parasympathetic nervous system உடல் ஓய்வு கொள்ள உதவுகிறது. இது தூண்டப் பெறுவதன் மூலம் உடலும் மனமும் அமைதி நிலையை அடைகிறது.

பிராணாயாம முறைகளில் ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது சஞ்சாரி நரம்பு (vagus nerve) தூண்டப்பெறுகிறது. சஞ்சாரி நரம்பு தூண்டப்படுவதால் மனநிலை மாற்றங்கள் (mood swings) மற்றும் மன அழுத்தம் குணமடைகின்றன.

மன அழுத்தத்தைப் போக்க இயற்கை  சூழல்கள் நிறைந்த யோகா பயிற்சி மையங்களில் இணைந்து பயிலலாம். இதன் மூலம் யோகப்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், இயற்கை சூழலில் சில நாட்கள் செலவிட முடிவதுடன், விடுமுறையை பயனுள்ள வழியில் கழிப்பதற்கான வாய்ப்பும் அமைகின்றன. மேலும் தகவல்களுக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள்

இதோ மன அழுத்தத்தைப் போக்கும் 15 முக்கிய ஆசனங்கள்:

1) பதுமாசனம்

பதுமாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) உத்தானாசனம்

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) வீரபத்ராசனம் 2

வீரபத்ராசனம் 2 பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Make Your Holidays Picture Perfect
var _tswcfg = {'target':document.getElementById('tripaneerSearchWidget'),'aid':'7414','url':'https://www.tripaneer.com','title':'Stay Away From Stress','subtitle':'Find a world of unique holidays, organized by passionate experts','searchPlaceholder':'Search for destinations, categories and styles...','searchButton':'Search','colorMain':'#02bf9b','colorDark':'#02886f','colorLight':'#ace6d9','fontColor':'#333333','fontSize':'16','radius':'4'};

4) கருடாசனம்

கருடாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

5) அதோ முக ஸ்வானாசனம்

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) அர்த்த பிண்ச மயூராசனம்

அர்த்த பிண்ச மயூராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) மர்ஜரியாசனம்

மர்ஜரியாசனத்தை அடுத்து கொடுக்கப்பட்டுள்ள பிடிலாசனத்துடன் சேர்த்துத் தொடர்ச்சியாக மாற்றி மாற்றி செய்யவும்.

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) பிடிலாசனம்

பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) உபவிஸ்த கோணாசனம்

உபவிஸ்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) பாலாசனம்

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) சாந்தி ஆசனம்

சாந்தி ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை; இது பூக்கள் நிறைந்த பாதை அல்ல. ஆனால், வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பொழுது பூக்களைப் பார்த்து மகிழ்வதோ முள்ளின் மீது கால் பதித்து வலியால் வருந்துவதோ நம்முடைய தேர்வு. மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்போம்; மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கி வாழ்வில் வென்று முழுமையான, நிறைவான வாழ்க்கை வாழ்வோம். 

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo-Che1211 என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும்

Read More »

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

Read More »

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்