உடல் மன ஆரோக்கியம்

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள் தலை மேல் அடித்துக் கூட (தங்கள் தலை மேல் அல்ல) சத்தியம் செய்யக் கூடும். அதுவும், “தலைவலி எனக்கு வந்ததே கிடையாது” என்று யாராவது சொன்னால், அதைக் கேட்டு இவர்கள் அதிர்ந்தும் (அவர் யோகக்காரர்டா என்று புகைந்தும்) போக வாய்ப்புண்டு. காரணம் இல்லாமல் இல்லை –  உலக மக்களில் காணப்படும் மிகப் பொதுவான உடல் சார்ந்த பிரச்சினைகளில் ஒற்றைத் தலைவலி மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி, கிளஸ்டர் தலைவலி மற்றும் டென்ஷன் தலைவலி ஆகியவை தலைவலி வகைகளில் முதன்மையானவை.

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களாகக் கூறப்படுபவை:

 • ஹார்மோன் பிரச்சினைகள்
 • மூளையில் இரசாயன மாற்றங்கள்
 • மத்திய நரம்பு மண்டல பிரச்சினை
 • குடும்ப வரலாறில் ஒற்றைத் தலைவலி இருத்தல்

தலைவலிக்கான தூண்டல்கள்

“எது வேண்டுமானாலும் தூண்டும்” என்பதே அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் கூறக் கூடியதாக இருக்கும். யதார்த்தத்தில், தலைவலிக்கான தூண்டல்கள் நபருக்கு நபர் வேறுபடலாம். பொதுவான தூண்டல்களில் சில:

 • அசீரணக் கோளாறுகள்
 • தவறான உணவு முறை பழக்கம்
 • தூக்கமின்மை
 • கழுத்து மற்றும் தோள் வலி
 • ஹார்மோன் மாற்றங்கள்
 • கடுமையான உடலுழைப்பு
 • காற்றோட்டம் குறைவான இடத்தில் இருத்தல்
 • சில வகையான பானங்கள்
 • அதீத வாசம், அதீத சப்தம் , மிகப் பிரகாசமான வெளிச்சம் போன்ற புலன் உறுப்புகளைத் தூண்டக் கூடியவை
 • கோபம்
 • மன அழுத்தம்

யோகா எப்படி தலைவலியைப் போக்குகிறது?

யோகாசனப் பயிற்சி தலைவலி ஏற்படுவதற்கான காரணிகளில் பெரும்பாலானவற்றை  நீக்குகிறது. அசீரணக் கோளாறு, கழுத்து மற்றும் தோள் வலி, ஹார்மோன் கோளாறுகள் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோபம் மற்றும் மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளையும் போக்க யோகப்பயிற்சி உதவுகிறது.

மன அழுத்தத்தின் காரணமாகத் தலைவலி ஏற்படுபவர்களுக்கு இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பயணம் செய்வது தொடர் மன அழுத்தத்திலிருந்து நல்ல மாறுதலைத் தரும். கூடுதலாகவும், நிரந்தரமாகவும் தீர்வு காண அருமையான இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் அமைந்திருக்கும் யோகா மையங்களில் பதிந்து விடுமுறையை ஆக்கபூர்வமாகக் கழித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் யோகாசனங்கள்

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் எளிய ஆசனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:

1) பதுமாசனம்

பதுமாசனம் மன அழுத்ததைப் போக்குவதன் மூலம் மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய தலைவலிகளைத் தவிர்க்க உதவுகிறது.

பதுமாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

2) உத்தானாசனம்

உத்தானாசனம் கழுத்து மற்றும் தோள் வலியைப் போக்குவதன் மூலம் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைத் தவிர்க்க உதவுகிறது.

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) பாதாங்குஸ்தாசனம்

பாதாங்குஸ்தாசனம் கழுத்துத் தசைகளை வலுப்படுத்துகிறது. வயிற்றுக் கோளாறுகளைப் போக்குகிறது. தூக்கமின்மையை சரி செய்கிறது. இதன் மூலம் இவற்றின் காரணமாக ஏற்படும் தலைவலியைப் போக்க உதவுகிறது.

பாதாங்குஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை ஆகியவற்றை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) திரிகோணாசனம்

திரிகோணாசனம் கழுத்து மற்றும் தோள்களைப் பலப்படுத்துவதன் மூலம் கழுத்து மற்றும் தோள்வலியால் ஏற்படக் கூடிய தலைவலியைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது. திரிகோணாசனம் செய்வதில் சிரமம் உள்ளவர்கள் அர்த்த திரிகோணாசனம் பயிலலாம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

அர்த்த திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

5) அதோ முக ஸ்வானாசனம்

அதோ முக ஸ்வானாசனம் சீரணத்தைப் பலப்படுத்தவும் மன அழுத்ததைப் போக்குவும் செய்வதால் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைச் சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

All Inclusive 5-Day Yoga Package
var _tswcfg = {'target':document.getElementById('tripaneerSearchWidget'),'aid':'7414','url':'https://www.tripaneer.com','title':'Hiking and Yoga Retreat','subtitle':'Find a world of unique holidays, organized by passionate experts','searchPlaceholder':'Search for destinations, categories and styles...','searchButton':'Search','colorMain':'#02bf9b','colorDark':'#02886f','colorLight':'#ace6d9','fontColor':'#333333','fontSize':'20','radius':'6'};

6) வஜ்ஜிராசனம்

வஜ்ஜிராசனம் மலச்சிக்கலைப் போக்கவும் சீரணத்தைப் பலப்படுத்தவும் உதவுவதால் இதன் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு உகந்த ஆசனமாக விளங்குகிறது.

வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

7) பாலாசனம்

தலைவலியைப் போக்கும் ஆசனங்களில் பாலாசனத்திற்கு முக்கிய இடமுண்டு. இவ்வாசனம் மலச்சிக்கலைப் போக்குகிறது, சீரணத்தை மேம்படுத்துகிறது, தூக்கமின்மையை சரி செய்வதோடு மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) புஜங்காசனம்

புஜங்காசனம் கழுத்து மற்றும் தோள்வலியைப் போக்குகிறது; மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. ஆக, இதன் காரணமாக ஏற்படும் தலைவலியைப் போக்க புஜங்காசனம் உதவுகிறது.

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

9) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் கழுத்து வலி மற்றும் அசீரணத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்க உதவுகிறது.

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் அசீரணம், தூக்கமின்மை மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்குவதன் மூலம் இவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்க உதவுகிறது.

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

11) சதுஷ் பாதாசனம்

அசீரணக் கோளாறு, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவதன் மூலம் சதுஷ் பாதாசனம் இவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.

சதுஷ் பாதாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

12) சர்வாங்காசனம்

ஆசனங்களின் அரசியான சர்வாங்காசனம் தலைவலியைப் போக்க உதவும் அற்புதமான ஆசனமாகும். இவ்வாசனத்தைப் பயில்வதால் கழுத்து மற்றும் தோள் பலப்படுத்தப்படுகிறது, தூக்கமின்மை சரியாகிறது; மன அழுத்தம் நீங்குகிறது. தொடர்ந்து இவ்வாசனத்தைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

13) ஹலாசனம்

ஹலாசனம் வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது; தூக்கமின்மையை சரி செய்கிறது; மன அழுத்தத்தைப் போக்குகிறது; கழிவுகளை வெளியேற்றுகிறது. ஆக, இவற்றின் காரணமாக வரும் தலைவலியைத் தவிர்க்க தொடர்ந்து ஹலாசனம் பழகி வரவும்.

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

14) விபரீதகரணீ

விபரீதகரணீ அசீரணம், கழுத்து வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்குவதால் இவற்றின் காரணமாக ஏற்படும் தலைவலியை சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

15) சாந்தி ஆசனம்

உடலின் இறுக்கத்தைத் தளர்த்தவும், தூக்கமின்மையைப் போக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுவதன் மூலம் சாந்தி ஆசனம் தலைவலியைப் போக்க உதவுகிறது.

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைப் பயில்வதன் மூலம் நீங்களும் ‘யோகக்காரராக’ ஆகலாம், அதாவது நீங்களும் தலைவலியிலிருந்து முழு நிவாரணம் பெறலாம்.

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும்

Read More »

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

Read More »

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்