சாமை உப்புமா

“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச் சுலபமாகச் சில நிமிடங்களில் செய்யக் கூடிய சிற்றுண்டி என்பதால் பெரும்பாலும் சமைப்பவர்களின் அபிமான உணவு இது. உப்புமா சுவையை விரும்பாதவர்களாக இருந்தாலும் சாமையின் நன்மைகள் கிடைக்க, சாமை உப்புமா பக்கம் கவனத்தைத் திருப்பவும். ஏனென்றால், இன்று நாம் சாமை உப்புமா செய்வது எப்படி என்று […]

சாமையின் நன்மைகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையின் சத்துகள் சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முக்கியமானவை. சாமையிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 329 கலோரி. சாமையின் பலன்கள் சாமையின் பலன்களில் சில: மலச்சிக்கலைப் போக்குகிறது வயிற்று உப்புசத்தை சரி செய்கிறது நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது இருதய நலனைப் […]

எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின்  பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation, expression போன்ற முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. செடிகளின் இயற்கையான எண்ணெய் செறிவூட்டப்படுவதால் இந்த எசன்சியல் எண்ணெய்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை. உதாரணத்திற்கு சொல்வதானால் சுமார் 5 மில்லிலிட்டர் ரோஜா எசன்சியல் எண்ணெய் தயாரிக்க தோராயமாக 2,24,000 ரோஜா இதழ்கள் தேவைப்படுகிறது. எசன்சியல் […]

மிளகின் அற்புத பலன்கள்

“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உணவிலும் உடலிலும் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும் ஆற்றல் கொண்டது மிளகு. சித்தர்கள் , உடல் நலத்தை அற்புதமாய் பேணுவதற்கும் இளமையைப் பாதுகாக்கவும் பரிந்துரைத்த திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலியைக் குறிப்பதாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மிளகின் மருத்துவ குணங்கள் போற்றப்பட்டதால், தென்னிந்திய சமையலில் மிளகுக்கு முக்கிய […]

முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்

சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கைச் சூழல் உருவாக்கியிருக்கும் வேலைமுறை தான். என்னடா இது, எதை எடுத்தாலும் இன்றைய வாழ்க்கை முறையைக் குறை சொல்வதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். சமீபத்திய வருடங்களில் ஏற்படும் நோய்த் தாக்கங்களுக்கு முதன்மையான காரணங்களாக, மனிதன் இயற்கையோடு இணைந்து வாழாமல் இயற்கைக்கு முரணான தேர்வுகளைச் செய்தல், உடற்பயிற்சியின்மை, பணியின் தன்மை காரணமாக நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் […]

தமிழ்