இன்று

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இவை அழகான புகைப்படங்கள் அல்லவென்றாலும் மிக அழகான நொடிகள். மொட்டை மாடியில் பயிற்சி செய்வதில் பல அனுகூலங்கள் இருந்தாலும், இந்த இயற்கை சில வேளைகளில் அபாரமாக மனதை திசைத் திருப்பி விடுகிறது. இன்று காலை தாய்ச்சி பயிற்சி முடித்து கீழே இறங்கத் தயாரான நொடியில் இந்த காட்சி கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. மரம் பாதி சூரியனை கபளீகரம் செய்தாற் போலிருந்தது… புகைப்படம் எடுத்த பின் சற்று நகர்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது, பாதி […]
இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும், செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்) போக மறுத்தலும், அக்கம்பக்கத்து குழந்தைகளோடு அடித்துப் பிடித்தலும், பொம்மைக்கு போட்டி இடுதலும் என பல வகையான ‘கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கிடையில்’ அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நமக்குத் தவிர்க்க முடியாத ஈர்ப்பு; குழந்தைகளின் மனம் அளவிற்கு பெரியவர்களின் மனம் பிறந்த நாளை […]
சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தில் முக்கிய சக்கரங்களாக எட்டு சக்கரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்கள் என்பது நாளமில்லா சுரப்புகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. நாளமில்லா சுரப்புகளும் உயிர் வளர்ப்பும் நாளமில்லா சுரப்புகள் தாங்கள் சுரக்கும் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் […]
இடுப்பு சதையைக் குறைக்கும் 19 ஆசனங்கள்

உடல் எடையைப் பொருத்த வரையில் நம்மில் பலரும் முதலில் கவனிக்கத் தவறுவது இடுப்பில் சதைப் போடத் துவங்குவதைத்தான். சில உடைகளை அணியக் கடினமாக ஆகும்போதுதான் நம் கவனம் இடுப்பு சதையில் திரும்புகிறது. அதற்குள் அது பிடிவாதமாக நிலைகொள்கிறது. குறிப்பிட்ட யோகாசனங்கள் இடுப்பில் உண்டாகும் அதிக சதையைக் குறைக்க உதவுகிறது. இன்று இடுப்பு சதையைக் குறைக்கும் ஆசனங்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால்: இடுப்பில் ஏன் சதை போடுகிறது? இடுப்பில் சதை போடுவதற்கான காரணங்களில் சில: உடற்பயிற்சியின்மை துரித வகை […]
தொப்பையை வயிறாக மாற்றும் 15 சிறந்த ஆசனங்கள்

உடல் எடைப் பராமரிப்புப் பகுதியில் முதலில் நாம் தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்: வயிற்றில் அதிக சதை ஏன் உருவாகிறது? தொப்பை ஏற்படுவதற்கான காரணங்களில் சில: தவறான உணவுப் பழக்கம் உடற்பயிற்சியின்மை தூக்கமின்மை நார்ச்சத்து குறைவான உணவுகள் எடுத்தல் புரதச்சத்து குறைவான உணவுகள் எடுத்தல் சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் எடுத்தல் மாதவிடாய் நிற்கும் காலம் ஹார்மோன் குறைப்பாடுகள் வயதாகுதல் மன அழுத்தம் பெற்றோர், தாத்தா பாட்டி போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொப்பை இருந்தாலும் உங்களுக்குத் தொப்பை […]