உடல் மன ஆரோக்கியம்

இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும்,  செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்) போக மறுத்தலும், அக்கம்பக்கத்து குழந்தைகளோடு அடித்துப் பிடித்தலும், பொம்மைக்கு போட்டி இடுதலும் என பல வகையான ‘கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கிடையில்’ அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நமக்குத் தவிர்க்க முடியாத ஈர்ப்பு;

குழந்தைகளின் மனம்  அளவிற்கு பெரியவர்களின் மனம் பிறந்த நாளை எண்ணி குதூகலிக்காமல் இருக்கலாம். ஆனால், வயதாகிறது என்கிற எண்ணத்தைப் புறம் தள்ளி, வயதாவதால் ஏற்படக் கூடிய உடல், மனம் சார்ந்த மாற்றங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உடலையும் மனதையும் இளமையாக வைத்து முழுமையான வாழ்க்கையை நிறைவாக வாழ்வது நம் கையில் தான் இருக்கிறது. வயதாவதைத் தவிர்க்க முடியாதுதான்; ஆனால் எப்படி வயதாகிறோம் என்பது நம்மிடம் தான் உள்ளது. இன்றைய பதிவில் இளமையைக் காக்கும் 14 ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

யோகா எப்படி இளமையைப் பராமரிக்கிறது?

முதுமை அடைவது என்பது இயல்பான போக்கு என்றாலும் முதுமைக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுவதில் யோகப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. 

 • ஒருவரின் முதுகெலும்பு எவ்வளவுக்கெவ்வளவு நலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவரின் உடல் நலம் மேம்பட்டதாக இருக்கும். ஒருவரின் முதுகுத்தண்டு எந்த அளவு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவிற்கு வயதாவதால் ஏற்படும் உடல் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. யோகா பயில்வதால் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மை பாதுகாக்கப்படுகிறது. 
 • தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வயது கூடும் போது மலச்சிக்கல் மற்றும் செரியாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துவதால் இப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு செரிமான மண்டலம் செம்மையாக இயங்குகிறது. 
 • வயதாகும் போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று உடல் சமநிலையில்  (balance) மாற்றம் ஏற்படுவது. யோகாசனம் உடல் சம நிலையை மேம்படுத்துவதன் மூலம் முதுமையினால் சமநிலை இழத்தல் தவிர்க்கப்படுகிறது.
 • யோகாசனம் பயில்வதால் மூட்டுகள் பலமாக இருப்பதோடு மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது. 
 • தொடர்ந்து யோகப்பயிற்சி செய்யும் போது நினைவாற்றல் பெருகுகிறது. வயது கூடும் போது நினைவாற்றல் குறைதல் என்பது பொதுவாகக் காணக் கூடியது. ஆனால், ஆசனங்கள் பயில்வதன் மூலம் அந்நிலையைத் தவிர்க்கலாம்.
 •  மனச் சோர்வு என்பது இக்காலத்தில் இளையவர்களிடமும் காணப்பட்டாலும், வயதில் முதியவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது. 

அனைத்திற்கும் மேலாக எந்த அளவிற்கு நாம் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு நம் மனம் இளமையாக இருக்கும். இளமையான மனம் உடலை இளமையாக வைக்க உதவுகிறது.

இளமையைக் காக்கும் 14 ஆசனங்கள்

இதோ இளமையைப் பராமரிக்கும்  முக்கிய ஆசனங்கள்:

1) விருக்ஷாசனம்

விருக்ஷாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) உத்தானாசனம்

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) உத்கடாசனம்

உத்கடாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) வீரபத்ராசனம் 1

வீரபத்ராசனம் 1 பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) அதோ முக ஸ்வானாசனம்

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) அர்த்த பிண்ச மயூராசனம்

அர்த்த பிண்ச மயூராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

https://www.herbspro.com/

7) பாலாசனம்

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) சதுரங்க தண்டாசனம்

சதுரங்க தண்டாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

resistance bands

10) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) சக்ராசனம் 

சக்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) விபரீதகரணீ

விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர சிறந்த முறையில் இளமையாகவே வயது கூடலாம். என்ன சொல்கிறீர்கள்? வயது என்பது வெறும் எண்ணிக்கை தானே.

நீண்ட முக்கிய பின்குறிப்பு: வயது கூடும் போது முக்கியமாகத் தவிர்க்க வேண்டியவை:

1) “வயசாச்சு; இனிமே  சர்க்கரை, இரத்த அழுத்தம் இதெல்லாம் வருவது இயற்கைதான்” என்று நாமாகவே முடிவு செய்து இப்பிரச்சினைகளை வரவேற்கத் தயாராக வேண்டாம்.

2) “எனக்கு வயசாச்சு. இனிமே வேலையெல்லாம் குறைச்சிக்க வேண்டியதுதான்” என்று நினைத்து நாம் இயல்பாக செய்யும் வேலைகள் எதையும் நிறுத்த வேண்டாம்; முடிந்த வரையில் செய்யப் பழகியவற்றைச் செய்வதே நல்லது.

3) “இந்த வயதில் இந்த மாதிரி உடை / அலங்காரம் எல்லாம் தேவையா?” என்று பிறர் நினைப்பார்கள் என்று நினைத்து எதையும் நிறுத்த வேண்டாம். பிறர் நினைத்தாலும் நிறுத்த வேண்டாம். உங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உடை உடுத்துங்கள், அணிகலன்களைத் தேர்ந்தெடுங்கள். அணிந்து மகிழுங்கள்.

4) இதுவரை பழகாத கலைகளில் உங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். புதிதாக ஒன்றைக் கற்கும் மனம் எப்போதும் புத்துணர்வுடனும் இளமையுடனும் இருக்கிறது. அவ்வாறு தெரிவு செய்யும் கலை உடல் இயக்கத்துக்கு வாய்ப்புக் கொடுப்பதாக இருந்தால் மிகவும் நல்லது. 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்