இன்று ஒரு ஆசனம் (93) – பத்ம ஹலாசனம் (Lotus in Plough Pose)

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது. பத்ம ஹலாசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இச்சக்கரங்கள் தூண்டப்படுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள் பற்றி நீங்கள் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். இச்சக்கரம் ஒவ்வொன்றின் சீராக இயக்கத்தால் ஏற்படும் விரிவான பலன்களை விரைவில் பார்க்கலாம். பத்ம […]
A Different Story

Sometimes, you have a destination like this in mind… but end up capturing this: but, the beauty is you made a step forward…Every move presents you with an experience. You may not have reached your destination today but definitely you would have had some great experiences on your way…some wonderful moments like this: Two in […]
இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது. சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் […]
இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது பொதுவாக சர்வாங்கசனத்திற்குப் பின் செய்யப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose (Plow Pose) என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் வளர்கிறது; அன்பு, பரிவு […]
இன்று ஒரு ஆசனம் (90) – சர்வாங்காசனம் (Shoulder Stand)

வடமொழியில் ‘சர்வ’ என்றால் ‘அனைத்தும்’ என்றும் ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் உடலின் எடையைத் தோள்களும் தலையும் தாங்கியிருக்கும். சர்வாங்காசனம் ஆசனங்களின் அரசி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Shoulder Stand என்று அழைக்கப்படுகிறது. சர்வாங்காசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி வளர்கிறது; விசுத்தி சக்கரம் தொடர்பாடல் திறனை வளர்ப்பதுடன், தன் எண்ணங்களை, தன் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை […]