இன்று ஒரு ஆசனம் (68) –ஆஞ்சநேயாசனம் (Low Lunge Pose / Crescent Moon Pose)

புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுதும் செலுத்த உதவுகிறது. சக்கரங்கள் மற்றும் அவற்றின் இயக்கம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். ஆஞ்சநேயாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் […]
உங்களின் கனிவான கவனத்திற்கு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பதிவேற்றம் செய்ய இயலவில்லை. இன்று தளத்தில் சிலவற்றை சீர் செய்ய வேண்டியிருப்பதால், இன்று ஒரு ஆசனம் பதிவு நாளை பதிவேற்றம் செய்யப்படும். ஆனாலும், உங்களை விடுவதாயில்லை. உங்களுக்காக எங்களின் மற்றொரு வலைப்பதிவில் முன்னர் வெளியுட்டள்ள பதிவுக்கான இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறோம். அதை click செய்யவும். https://doctorinyourbody.blogspot.com/2016/05/yoga-for-anti-aging.html இணைப்பைப் பார்த்தாலே புரிந்திருக்கும். வயதாவதோடு இணைந்திருக்கும் உடல் ரீதியான மாற்றங்களைத் தவிர்ப்பதற்கான ஆசனங்களும் இளமையான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆசனங்களும் அப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. […]
இன்று ஒரு ஆசனம் (67) – ஊர்த்துவ தனுராசனம் (Upward Bow Pose)

ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர். ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். வடமொழியில் ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’ என்றும் ‘தனுர்’ என்றால் ‘வில்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Upward Bow Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனத்தின் செய்முறைப் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். சக்ராசனத்தைப் போலவே ஊர்த்துவ தனுராசனமும் உடலில் உள்ள எட்டு சக்கரங்களையும் தூண்டி […]
உயிர் காக்கும் சக்கரங்கள்
இது வரை பார்த்த பல ஆசனங்களிலும் சக்கரங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இன்று சக்கரங்கள் என்றால் என்ன, உடலில் உள்ள சக்கரங்கள் எவ்வளவு மற்றும் அவை உடலில் எங்கே இருக்கின்றன, அவற்றின் சுரப்புகள் எது, அவற்றின் பணிகள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். சக்கரங்கள் ஏழு அல்ல – எட்டு பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா […]
இன்று ஒரு ஆசனம் (66) – பரிகாசனம் (Gate Pose)

‘பரிக’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘உத்திரம்’ அல்லது ‘கதவை மூடப் பயன்படும் கட்டை’ என்பதாகும். இது ஆங்கிலத்தில் Gate Pose என்று அழைக்கப்படுகிறது. உத்திரம் என்பது எப்படி ஒரு கட்டடத்துக்கு இன்றியமையாததோ, அது போல் பரிகாசனம் செய்வதும் உடல் நலத்துக்கு இன்றியமையாததாகும். இவ்வாசனத்தில் உடல் முழுதும் நீட்சியடைவதோடு மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. பரிகாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது நிலையான தன்மை வளர்கிறது. பரிகாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை […]