இன்று ஒரு ஆசனம் (35) – துலாசனம் (Scale Pose / Elevated Lotus Pose)

‘துலா’ என்ற வடமொழி சொல்லுக்கும் ‘தராசு’ என்று பொருள். இங்கு தராசு என்பது சமநிலை என்பதை குறிப்பதாக உள்ளது; அதாவது, துலாசனத்தில் உடலை சமநிலையில் கைகளால் தாங்குவதால் இந்த ஆசனம் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது. துலாசனம் பயிலும் போது மணிப்பூரக சக்கரம் தூண்டப்பட்டு உடலிலும் மனதிலும் ஆற்றல் பெருகுகிறது. மணிப்பூரக சக்கரம் அண்டத்திலிருந்து பிராண சக்தியை கவருகிறது. இந்த சக்கரத்தின் சீரான இயக்கம் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் வளர்க்கிறது. இதன் மூலம் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது. […]

இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)

‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை எலும்பிலிருந்து தாடை வரை இருக்கும் தசைகளை உறுதியாக்குகிறது. மூலாதாரம், ஜாலந்தரம் மற்றும் உட்டியாண பந்தங்களின் இயக்கத்தை செம்மையாக்கி உடம்பில் பிராண சக்தி ஓட்டத்தை சீர்ப்படுத்துகிற்து. சிங்காசனத்தின் மேலும் சில பலன்கள் நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது. நோய் எதிர்க்கும் […]

இன்று ஒரு ஆசனம் (33) – பத்ராசனம் (Auspicious Pose / Gracious Pose)

‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம். பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது. மூலாதார சக்கரமே பிற சக்கரங்களின் நலத்துக்கு அடிப்படை. பத்ராசனத்தின் […]

இன்று ஒரு ஆசனம் (32) – நவாசனம் (Boat Pose)

‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்ப்தல் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை இந்த ஆசனம் பராமரிக்கிறது. அதாவது, மணிப்பூரகம் (pancreas) சுவாதிட்டானம் (adrenal) ஆகிய இரு சக்கரங்களையும் இயக்குகிறது. மணிப்பூரகமும் சுவாதிட்டானமும் நன்கு இயங்கும் போது தன் மதிப்பு, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு ஆகிய உணர்வுகள் அதிகரிக்கின்றன. இந்த உணர்வுகள் உடல் என்னும் படகின் […]

அமைதி பிராமரி பிராணாயாமத்தின் பலன்கள்

  பிராமரி பிராணாயாமம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி முன்னர் பார்த்தோம். பிராமரி பிராணாயாமத்தை மேலும் சில வகைகளிலும் செய்யலாம். இன்று நாம் இரண்டாவது வகையான அமைதியான பிராமரி பிராணாயாமம் செய்முறையை பார்க்கலாம். அடிப்படை பிராமரி பிராணாயாமம் பலன்கள் மற்றும் செய்முறையை பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செய்யவும். அமைதி பிராமரி பிராணாயாமம் செய்முறை விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சு விடவும். பின் […]

தமிழ்