உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (33) – பத்ராசனம் (Auspicious Pose / Gracious Pose)

‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம்.

பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது. மூலாதார சக்கரமே பிற சக்கரங்களின் நலத்துக்கு அடிப்படை.

Gracious Pose benefits

பத்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
 • மூச்சு கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
 • சுகப்பிரசவம் ஆக உதவுகிறது.
 • சையாடிக் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
 • இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
 • சிறுநீரகத்தின் நலத்தை பாதுகாக்கிறது.
 • சிறுநீர் கடுப்பை போக்க உதவுகிறது.
செய்முறை
 • விரிப்பில் அமரவும்.
 • இரண்டு கால்களையும் மடித்து பாதங்களை ஒன்று சேர்த்து வைக்கவும்.
 • கைகளால் கால் விரல்களை பற்றி மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்னால் குனிந்து நெற்றியை தரையில் வைக்கவும்.
 • கைகளை தலைக்கு முன்னால் நீட்டி உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்வது போல் தரையில் வைக்கவும்.
 • 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு

கர்ப்பிணி பெண்கள் நெற்றியை தரையில் வைக்கக் கூடாது. கைகளால் கால்களை பற்றி அமர்ந்தாலே போதுமானது.

தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)

‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை

Read More »

இன்று ஒரு ஆசனம் (32) – நவாசனம் (Boat Pose)

‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்ப்தல் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை

Read More »

இன்று ஒரு ஆசனம் (31) – உஸ்ட்ராசனம் (Camel Pose)

வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்