இன்று ஒரு ஆசனம் (18) – பிடிலாசனம் (Cow Pose)

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat / cow pose) என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டும் சேர்ந்துதான் சிறப்பான பலன்களைத் தரும். முதுகுத்தண்டு உள்புறமாகவும் மேல்புறமாகவும் அழுத்தி உயர்த்தப்படுவதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகமாகிறது. முதுகுப் பகுதி முழுவதும் புத்துணர்வு பெறுகிறது. முக்கிய குறிப்பு: பஸ்சிமோத்தானாசனம் செய்த பின் […]
இன்று ஒரு ஆசனம் (17) – மர்ஜரியாசனம் (Cat Pose)

வட மொழியில் மர்ஜரி என்றால் பூனை என்று பொருள். அதாவது பூனை, உடலை நீட்டி சோம்பல் முறுக்குவது போன்ற நிலை இந்த நிலை. எளிதாக இருந்தாலும் இதன் நன்மைகள் பெரியவை. உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும். மனதை ஒரு நிலைப்படுத்த உதவும். மனதின் ஆற்றலை மேம்படுத்தும். மன இறுக்கத்தை அகற்றும். உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால்தான் மேற் சொன்ன நன்மைகள் நடக்கும். இதற்கு சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய வேண்டும். மேலும், அட்ரீனல் சுரப்பி சிறப்பாக சுரந்தால்தான் […]
இன்று ஒரு ஆசனம் (16) – பஸ்சிமோத்தானாசனம் (Seated Forward Bend)

பஸ்சிமோத்தானாசனம் என்னும் ஆசனத்தை புஜங்காசனம், சலம்ப புஜங்காசனம் இரண்டுக்கும் மாற்றாகச் செய்யலாம். ‘பஸ்சிமா’ என்றால் வடமொழியில் ‘மேற்கு’ என்று பொருள். ‘உத்தனா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ (intensive stretching) என்று பொருள். பின் உடலைக் கொண்டு நீளுதல், அதாவது, அமர்ந்த நிலையில் உடலை முன் வளைத்து நீட்டுதல் ஆகும். இதில் உடலின் பின் பகுதி, குறிப்பாக முதுகுத்தண்டு முன்னோக்கி இழுக்கப்படுகிறது. முதுகுத்தண்டு இழுக்கப்படுவதால் அதன் இயக்கம் மேம்படுகிறது. முதுகுத்தண்டிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு சக்தி பாய்ச்சப்படுகிறது. அதனால், இந்த […]
இன்று ஒரு ஆசனம் (15) – சலம்ப புஜங்காசனம் (Sphinx Pose)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம் ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். ‘சலம்பம்’ என்றால் ‘ஆதரவு’ (support). ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள். ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் […]
இன்று ஒரு ஆசனம் (14) – பாலாசனம் (Child Pose)

ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே வலம் வரத் துவங்கும். தன் மார்பினாலும் மேற்கையினாலும் உந்தித் தள்ளி வலம் வரும். குழந்தையின் இந்த இயக்கத்தினால்தான் அதன் முதுகு, கழுத்து, தோள்பட்டைகள், கைகள் என உடலின் மேல்பகுதி பலமடைந்து, உட்காருதல், தவழுதல், முட்டிப் போடுதல் என அடுத்த நிலைக்கு குழந்தை […]