புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் (Prostate Enlargement) போக்கும் ஆசனங்கள்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம், அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களிடையே பரவலாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியான புரோஸ்டேட் சுரப்பி தோராயமாக ஒரு வால்நட் அளவில் இருக்கக் கூடியதாகும். இது தன் அளவை விட பெரியதாவதே புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (prostate gland enlargement) என்று அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும்  ஆபத்தற்றவை என்பதால் இத்தகைய மிகைப்பெருக்கம் தீதிலி புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (benign prostatic hyperplasia) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அளவில் பெருகும் தீதிலி […]

கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன. இன்று கண் பார்வைக் குறைப்பாட்டை சரி செய்யும் 10 ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள் கண் பார்வையைத் தெளிவாக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர பார்வையில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஆய்வு முடிவு அறிவிக்கின்றது.  பார்வை […]

நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள்

பல மணி நேரம் தொடர்ந்து அமர்வதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் நீண்ட நேரம் அமர்வதால் உடல் எடை கூடுதல், தொப்பை விழுதல் முதல் இருதயப் பிரச்சினைகள் வரை பல்வேறு உபாதைகள் உருவாகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வருவதால், மேற் குறிப்பிடப்பட்டுள்ள உபாதைகளின் […]

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்

உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை உள்ளவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கூடியிருப்பது தெரிய வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு சமீப வருடங்களில் அதிகமாகி இருப்பதையும் அறிய முடிகிறது. தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆசனங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம். தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் […]

மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்

உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும் மேற்பட்டவை. மூட்டழற்சிக்கான முழுமையான தீர்வு எதுவும் இல்லையென்று சொல்லப்பட்டாலும், மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சையளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் காணப்படுவது உண்டு. இன்றைய தினம், மூட்டழற்சிக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம். மூட்டழற்சி – முக்கிய வடிவங்களும் காரணங்களும் மூட்டழற்சியில் பல வடிவங்கள் இருந்தாலும், பொதுவான மூட்டழற்சி வடிவங்களாகக் கருதப்படுபவை: கீல்வாதம் (osteoarthritis) முடக்கு […]

தமிழ்