அமிலப் பின்னோட்ட நோய் (ஆசிட் ரிஃப்ளெக்ஸ்) தீர்க்கும் ஆசனங்கள்

அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் பின்னோட்ட நோய் பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட 50 சதவீதம் கூடியிருப்பதாக அறிய முடிகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் அமிலப் பின்னோட்ட நோய் உண்டாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று […]

தூக்கமின்மையைப் போக்கும் சிறந்த யோகாசனங்கள்

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர். “சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்.” அதாவது, வேட்டை நாய்கள், இரையைக் கவ்வுவது போல, இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை புத்தி மயக்கம், தெளிவின்மை, அய்ந்து புலன்களிலும் சோர்வு, செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் என்று சித்தர்கள் […]

முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்

சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கைச் சூழல் உருவாக்கியிருக்கும் வேலைமுறை தான். என்னடா இது, எதை எடுத்தாலும் இன்றைய வாழ்க்கை முறையைக் குறை சொல்வதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். சமீபத்திய வருடங்களில் ஏற்படும் நோய்த் தாக்கங்களுக்கு முதன்மையான காரணங்களாக, மனிதன் இயற்கையோடு இணைந்து வாழாமல் இயற்கைக்கு முரணான தேர்வுகளைச் செய்தல், உடற்பயிற்சியின்மை, பணியின் தன்மை காரணமாக நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் […]

இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும், செய்தவற்றையும்,  செய்யத் தவறியவற்றையும், செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுவதாக இருக்கிறது. சிறு குழந்தைகளின் மனம் உன்னதமானது. பள்ளிக்கூடம் (online வகுப்பாக இருந்தாலும்) போக மறுத்தலும், அக்கம்பக்கத்து குழந்தைகளோடு அடித்துப் பிடித்தலும், பொம்மைக்கு போட்டி இடுதலும் என பல வகையான ‘கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கிடையில்’ அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நமக்குத் தவிர்க்க முடியாத ஈர்ப்பு; குழந்தைகளின் மனம்  அளவிற்கு பெரியவர்களின் மனம் பிறந்த நாளை […]

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்ற மனரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, “கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த போது” ஒரு யோசனை வந்ததாகக் கூறுவதில் உண்மையிலேயே நகைச்சுவை தாண்டிய உண்மையும் இருக்கிறது. மலம் கழிக்கும் போது மூளையின் சுறுசுறுப்பு அதிகரிப்பதை […]

தமிழ்