உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும் மேற்பட்டவை. மூட்டழற்சிக்கான முழுமையான தீர்வு எதுவும் இல்லையென்று சொல்லப்பட்டாலும், மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சையளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் காணப்படுவது உண்டு. இன்றைய தினம், மூட்டழற்சிக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம்.
மூட்டழற்சி – முக்கிய வடிவங்களும் காரணங்களும்
மூட்டழற்சியில் பல வடிவங்கள் இருந்தாலும், பொதுவான மூட்டழற்சி வடிவங்களாகக் கருதப்படுபவை:
- கீல்வாதம் (osteoarthritis)
- முடக்கு வாதம் (rheumatoid arthritis)
- சிரங்கு மூட்டழற்சி (psoriatic arthritis)
- சூலைக்கட்டு (gout)
மூட்டழற்சிக்கு உறுதியான காரணங்கள் அறியப்படவில்லை என்றாலும் மூட்டழற்சியை உருவாக்கக் கூடியவைகளாக அறியப்படுபவற்றுள் சில:
- குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் மூட்டுப் பிரச்சினை காணப்படுதல்
- நோய்த் தொற்று
- அதிக உடல் எடை
- உடற்பயிற்சி இல்லாமை
- தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder)
- காயம் ஏற்பட்டிருத்தல்
மூட்டழற்சிக்கான அறிகுறிகள்
மூட்டழற்சிக்கான அறிகுறிகளில் சில:
- வலி
- மூட்டுகளில் வீக்கம்
- மூட்டுகளில் இறுக்கம்
- மூட்டு அசைவுகள் பாதிப்பு
மூட்டழற்சிக்கு ஆசனங்கள் எவ்வாறு உதவுகின்றன?
மூட்டழற்சியின் தாக்கத்தைக் குறைக்க ஆசனப்பயிற்சி உதவுவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. 1980 முதல் 2010 வரையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் தொடர் யோகப்பயிற்சியின் விளைவாக மூட்டுக் கோளாறினால் ஏற்படக் கூடிய வலி மற்றும் வீக்கம் குறைவதும், மூட்டு அசைவுகளில் முன்னேற்றம் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூட்டுப் பிரச்சினைகளுக்கான யோகா மூலம் உடலின் ஆற்றல் மேம்படுவதுடன் மன நலமும் முன்னேறுவதாகத் தெரிய வருகிறது.
உடற்பயிற்சியில் ஈடுபட்டிராத அல்லது மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் யோகாசனம் பயிலும் போது மூட்டுக் கோளாறுகளின் தாக்கம் குறைவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வு முடிவின்படி:
- ஆசனங்களைப் பயில்வதால் மூட்டு வலி குறைகிறது.
- மூட்டு வீக்கம் குறைகிறது.
- மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையில் முன்னேற்றம் காணப்படுகிறது
மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்
1) தாடாசனம்
தாடாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) உத்தானாசனம்
உத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) விருக்ஷாசனம்
விருக்ஷாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) வீரபத்ராசனம் 2
வீரபத்ராசனம் 2-ன் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை குறித்து அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) உஸ்ட்ராசனம்
உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறை குறித்து அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) பத்த கோணாசனம்
பத்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) ஜானு சிரசாசனம்
ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) சலம்ப புஜங்காசனம்
சலம்ப புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) சலபாசனம்
சலபாசனம் பலன்கள் மற்றும் செய்முறை குறித்து அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) தனுராசனம்
தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
13) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
14) சாந்தி ஆசனம்
சாந்தி ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேற்கூறப்பட்டுள்ள மூட்டழற்சிக்கான 14 ஆசனங்களையும் தொடர்ந்து பயின்று வர நல்ல பலன்களை அடையலாம்.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
4 Responses
அருமை! விளக்கமான பதிவுகள்!
யோகா செய்ய ஊக்கம் ஏற்படும் வகையில் செய்முறை விளக்கங்கள் இருக்கின்றன. மிகவும் பயனுள்ள பதிவு!
மிக்க நன்றி! உங்களின் தொடர் ஆதரவும் ஆக்கமான கருத்துகளும் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி.
மிகவும் அருமை…..
பயனுள்ள பதிவு..
இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களில் சிலவற்றை தினமும் செய்து வருவதால் மூட்டு வலியின் தீவிரம் குறைந்துள்ளது என்பது என்னுடைய சொந்த அனுபவம்.
மிக்க நன்றி. தங்களின் கருத்து பதிவுக்கு மேலும் வலுவூட்டுவதாக உள்ளது. தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருவதற்கு நன்றி பல.