உடல் மன ஆரோக்கியம்

தூக்கமின்மையைப் போக்கும் சிறந்த யோகாசனங்கள்

Share on facebook
Share on twitter

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர்.

“சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண்.”

அதாவது, வேட்டை நாய்கள், இரையைக் கவ்வுவது போல, இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை புத்தி மயக்கம், தெளிவின்மை, அய்ந்து புலன்களிலும் சோர்வு, செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். தூக்கமின்மை பல்வேறு உடல், மன பிரச்சினைகளுக்கு அடிப்படையாகிறது. சமச்சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இரவில் ஆழ்ந்த நித்திரையைப் பெற முடியும். தூக்கமின்மையைப் போக்கும் சிறந்த யோகாசங்கள் பயில்வது நல்ல விளைவைத் தரும்.

தூக்கமின்மைக்கான காரணங்கள்

தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

 • முறையான உறக்க நேரத்தைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்
 • மன அழுத்தம்
 • தாமதமாக இரவு உணவு அருந்துதல்
 • உடல் வலி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவை
 • நுரையீரல் கோளாறு, இருதய கோளாறு, தைராய்டு அதிகமாகச் சுரத்த்ல் உள்ளிட்ட மருத்துவ காரணங்கள்

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்

தொடர்ந்து ஆழ்ந்த உறக்கம் இல்லாது போனால் ஏற்படும் விளைவுகளில் சில:

 • மலச்சிக்கல்
 • செரியாமை
 • நோய் எதிர்ப்புத் திறன் குறைதல்
 • நுரையீரல் கோளாறுகள் உண்டாவதற்கான சாத்தியங்கள்
 • அதிக இரத்த அழுத்தம்
 • இருதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள்
 • இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல்
 • உடல் எடை கூடுதல்
 • எதிலும் ஈடுபாடற்ற தன்மை
 • கவனக் குறைபாடு
 • சிடுசிடுப்பு, எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்கள்
 • மன அழுத்தம்
 • பதட்டம்

தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள்

யோகப் பயிற்சி செய்வதால் உடலும் மனதும் அமைதியடைகின்றன. வலி போன்ற உடல் உபாதைகளை ஆசனங்கள் போக்க உதவுகின்றன. மேலும் வாழ்க்கை முறையை சீரானதாக்கவும் ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றன. இரவு படுக்கப் போகும் போது தான் தினசரி வாழ்வின் கவலைகளை மனது அசைப்போடத் தொடங்கும். இதனால் தூக்கமும் தள்ளிப் போகும். ஆசனப் பயிற்சி செய்வதால் மனதை நாம் செய்யும் வேலையில் முழுமையாக ஈடுபடுத்த முடிகிறது. இதை mindfulness என்று கூறலாம். ஆசனப் பயிற்சி இதை சாத்தியப்படுத்துவதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் கொள்ள உதவுகிறது.

தூக்கமின்மையைப் போக்கும் எளிய ஆசனங்கள்:

1) உத்தானாசனம்

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) பாலாசனம்

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) ஜானு சிரசாசனம்

ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) பத்த கோணாசனம்

பத்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) சாந்தி ஆசனம்

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சரியான தலையணையில் தலை வைத்துப் படுக்காவிட்டாலும் தூக்கம் கெடும். உங்களுக்கேற்ற தலையணையைத் தேர்ந்த்டுக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இரவு உறக்கத்திற்கு உங்களை எல்லா வகையிலும் தயார் செய்து கொள்ள வேண்டும். 

இரவில் இறுக்கமான ஆடைகள் அணியாமல் தளர்வான உடைகளை அணிவது உடல் மற்றும் மனதளவிலும் இரவு உறக்கத்திற்குத் தயார் செய்து கொள்ள உதவும். உங்களுக்கான இரவு உடைகளைத் தேர்வு செய்ய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்