நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள்

கடுமையான உடல் உழைப்பு, மண்ணுக்கேற்ற உணவு, நல்ல ஓய்வு, மன அழுத்தமின்மை, நல்ல சுற்றுச்சூழல் ஆகிய அய்ந்தும் நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்க்கும் திறனை அளித்திருந்தன. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை வேறாக இருக்கிறது. போதாத குறைக்கு கொரோனாவின் கொட்டம் வேறு. பள்ளிக்கூடமும் அலுவலகமும் போய் வந்தது கூட சாத்தியப்படாமல் இப்போது ‘online schooling, ‘work from home’ என கொஞ்ச நஞ்ச நடவடிக்கைகளும் அற்றுப் போய் எந்நேரமும் அலைபேசியோடும் கணினியோடும் மன்றாடிக் கொண்டிருக்க வேண்டியதாக […]
அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். அசீரணக் கோளாறு ஏன் ஏற்படுகிறது? அசீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களில் சில: நேரம் தப்பி உண்ணுதல், துரித வகை உணவு உண்ணுதல், மிக அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு பழக்கங்கள் அதிகமாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் […]
கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும் பரவலாக, உலகளவில் பெரும்பான்மையானவர்களைப் பாதிக்கக் கூடிய ஒன்றாக ஆகி விட்டது. கணினி பயன்பாடு, வேலை செய்யப் பயன்படுத்தும் மேசை நாற்காலி உயரம் போன்ற பலவும் பணி சார்ந்த கழுத்து வலி ஏற்படுவதற்கான சமீபத்திய காரணங்களில் சில. இன்றைய பதிவில் கழுத்து வலியைப் […]
அதிக தொடை சதையைக் கரைக்கும் ஆசனங்கள்

பொதுவாகவே உடலில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பை மட்டுமே கரைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், முழு உடலுக்கான பயிற்சியின் மூலம் உடல் முழுவதிலும் உள்ள அதிகக் கொழுப்பு கரையும் போது குறிப்பிட்ட பகுதிகளுக்கும் சேர்த்தே பலன் கிடைக்கும். யோகா எவ்வாறு அதிக தொடைக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது? கால் தசைகளுக்குப் பலமூட்டும் ஆசனங்கள், தசைகளை உறுதியாக ஆக்குகின்றன. தொடை சதைக்கென்று வழங்கப்பட்டுள்ள ஆசனங்கள் கல்லீரலைப் பலப்படுத்தி கல்லீரலின் செயல்பாடுகளையும் மேம்படுத்துவதால் அதிகக் கொழுப்புக் […]
மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு online வகுப்புகளால் stress அதிகம்’ என்பது பெரும்பாலான வீடுகளில் கேட்கும் குரலாக இருக்கிறது. எந்த பிரச்சினையிலும் மன அழுத்தத்தை அண்ட விடாதவர்கள் கூட ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போதும் வரும் பதிவு செய்யப்பட்ட கொரோனா தகவல்களைக் கேட்டால் stress ஆகிவிடுவார்கள். […]