இன்று ஒரு ஆசனம் (80) – இராஜ கபோடாசனம் (King Pigeon Pose)

கட ந்த இரண்டு நாட்களில் நாம் ஏக பாத இராஜ கபோடாசனம் மற்றும் அதோ முக கபோடாசனம் ஆகிய இரண்டு ஆசனங்களைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம். பின் வளையும் ஆசனங்களில் இது அற்புதமான மற்றும் சவாலான ஒரு ஆசனமாகும். நாம் முன்னரே அறிந்தது போல் ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ என்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்றும் பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் இராஜ கபோடாசனம் என்று அழைக்கப்படுகிறது. இராஜ கபோடாசனத்தில் அனாகதம், விசுத்தி, […]
இன்று ஒரு ஆசனம் (79) – அதோ முக கபோடாசனம் (Downward Facing Pigeon Pose)

நேற்றைய பதிவில் ஏக பாத இராஜகபோடாசனம் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அதோ முக கபோடாசனம். ஏக பாத இராஜகபோடாசனம் செய்வதற்கு முன் இவ்வாசனத்தை செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும். வடமொழியில் ‘அதோ’ என்றால் ‘கீழ்நோக்கி’ ‘முக’ என்றால் ‘முகம்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் கீழ்நோக்கி இருக்கும் பறவையை ஒத்து இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. அதோ முக கபோடாசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் […]
இன்று ஒரு ஆசனம் (78) – ஏக பாத இராஜகபோடாசனம் (One-Legged King Pigeon Pose)

வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் One-Legged King Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது. காகமும் புறாவும் மிக புத்திசாலியான பறவைகள் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. காகம் பற்றி நாம் காகாசனத்தில் குறிப்பிட்டிருந்தோம். பறவையால் மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் […]
இன்று ஒரு ஆசனம் (77) – வசிஸ்தாசனம் (Side Plank Pose)

வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Side Plank Pose என்று அழைக்கப்படுகிறது. வசிஸ்தாசனம் மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது. அன்பு, அமைதி ஆகிய பண்புகளை வளர்க்கவும், தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கவும் இவ்வாசனம் உதவுகிறது. வசிஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள் கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது இடுப்புப் பகுதியைப் […]
இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்கட கோணாசனம். வடமொழியில் ‘உத்கட’ என்றால் ‘பலம் நிறைந்த’ மற்றும் ‘தீவிரமான’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது. இடுப்புப் பகுதியை வலுவாக்கவும் விரிக்கவும் செய்யும் உத்கட […]