இதுவரை நாம் செய்து வந்த ஆசனங்கள் உடலின் சில பகுதிகளை பலப்படுத்தவையாக இருந்தது. இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துகிறது. ‘கும்பக’ என்றால் ‘கொள்கலன்’. இந்த உடல் என்னும் கொள்கலனில் இரத்தமும் பிராணசக்தியும் ஊற்றுவதற்கான ஆசனம் இது என்று பொருள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் முழுதும் இரத்தமும், உயிர் சக்தியும் பாய்ச்சப்பட்டு கொள்கலன் நிறைகிறது. மணிக்கட்டு, கைகள், தோள்கள், முதுகு, முதுகுத்தண்டு, இடுப்பு, புட்டம், தொடை, முட்டி, முழங்கால், கணுக்கால், விரல்கள் என உடல் முழுதும் புத்துணர்வு பெறுகிறது. அதாவது நிறைகுடம் ஆகிறது. அதனாலேயே, இது ஒரு முக்கியமான பயிற்சியாக உலகமெங்கும் சொல்லப்படுகிறது.

High Plank Pose

கும்பக ஆசனத்தின் மேலும் சில பலன்கள்
  • வயிற்று பகுதியைப் பலப்படுத்துகிறது.
  • கழுத்துத் தசைகளைப் பலப்படுத்துகிறது.
  • முதுகு வலி குறைய உதவுகிறது.
  • உடலின் சமநிலையை பராமரிக்கிறது.
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது.
செய்முறை
  • அதோ முக ஸ்வானாசனா நிலைக்கு வரவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறே உங்கள் மேல் உடலை முன்னால் செலுத்தவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாக இருக்க வேண்டும்.
  • தோள்களை விரிக்கவும்.
  • கழுத்தை முதுகுத்தண்டுக்கு நேராக வைத்து தரையை பார்க்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் உடலை தளர்த்தவும்.
குறிப்பு

மணிக்கட்டில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்