உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (20) – பவன முக்தாசனம் (Wind Relieving Pose)

தனுராசனத்துக்கு மாற்றாக செய்யப்படுவது பவன முக்தாசனம். காற்று விடுவிக்கும் நிலை (Wind Relieving Pose) என்று இதற்கு பொருள்.

மனித உடலில் வருகின்ற நோய்கள் என்பது 4448 என்று நமது முன்னோர்களான சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்குள்ள நோய்கள் வரை அத்தனையும் இதில் அடக்கம் என்கின்றனர். இந்த 4448 நோய்களுக்கும் அடிப்படையான பிணிகள் இரண்டுதான் – ஒன்று, மலச்சிக்கல்; இரண்டு, செரியாமை. அதனால்தான், மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள், மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள்.

உடலின் நடுப்பகுதியை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய்கள் எதுவும் அண்டாது. அப்படி நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை பகுதியை நலமாக வைத்திருக்க உதவுவதுதான் பவன முக்தாசனம். வட மொழியில் ‘பவன’ என்றால் ‘காற்று’, ‘முக்த’ என்றால் ‘விடுவிப்பது’ என்பதாகும். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு காலாக மடித்து செய்வது, இரண்டு கால்களையும் மடித்து செய்வது. ஒவ்வொரு காலாக மடித்து செய்யும் போது வயிறு பகுதியின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம் ஏற்பட்டு மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் முதலியவை நல்ல இயக்கம் பெறுகிறது.

இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் சேர்த்து அழுத்தும் போது வயிறு பகுதியின் நடுப்பகுதி அழுந்தப்பட்டு வயிறு, கணையம், சிறுநீர்ப்பை, குடல்கள் இயக்கம் பெறுகின்றன. மொத்தத்தில் சீரண உறுப்புகள் அத்தனையும் இயக்கம் பெற்று மலச்சிக்கல், செரியாமை, அசீரணம் இவற்றின் விளைவாக ஏற்படும் வாயுத் தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அபான வாயு என்று சொல்லக் கூடிய, கீழ் நோக்கிய வாயுவை, மேலேற விடாமல் சீராக கீழ்நோக்கி தள்ளுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது உடலின் நடுப்பகுதி கல்லையும் சீரணிக்கும் ஆற்றலை பெறுகிறது.

பவன முக்தாசனத்தின் மேலும் சில பலன்கள்
 • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
 • சீரணத்தை பலப்படுத்துகிறது.
 • முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.
 • தொடைகளை உறுதியாக்குகிறது.
 • அடி முதுகையும் இடுப்பையும் தளர்த்துகிறது.
செய்முறை
 • விரிப்பில் நேராக படுக்கவும்.
 • வலது காலை மடித்து இரண்டு கைகளாலும் வலது கால் முட்டிக்கு கீழ் பிடித்து காலை முகத்தை நோக்கி அழுத்தவும். முகத்தையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயும் காலும் படுமாறு வைக்கவும். இடது கால் தரையில் நீட்டியபடியே 20 வினாடிகள் இருக்க வேண்டும்.
 • பின் வலது காலை தரையில் வைத்து இதே போல், கால் மாற்றி இடது காலை மடித்து வலது காலை நீட்டி செய்யவும். இதுதான் முதல் நிலை.
 • இரண்டாவது நிலையில் இரண்டு கால்களையும் மடித்து, முட்டிக்கு கீழ் கைகளை சேர்க்கவும். பின், கால்களை அழுத்தி, முதலில் செய்தது போல், தலையையும் மேல் முதுகையும் உயர்த்தி முகவாயை கால் முட்டிக்கு இடையில் வைக்கவும்.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை விடுவித்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு

கழுத்து வலி உள்ளவர்கள், தலையை தரையிலேயே வைத்து முடிந்த அளவு கால்களை மடக்கினால் போதுமானது.

இருதய கோளாறு, அதிக இரத்த அழுத்தம், முதுகுத்தண்டு பிரச்சினை, குடலிறக்கம், அதிக அமில சுரப்பு மற்றும் சையாடிக் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

இன்று ஒரு ஆசனம் (21) – கும்பக ஆசனம் (High Plank Pose)

இதுவரை நாம் செய்து வந்த ஆசனங்கள் உடலின் சில பகுதிகளை பலப்படுத்தவையாக இருந்தது. இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துகிறது. ‘கும்பக’ என்றால் ‘கொள்கலன்’. இந்த உடல் என்னும் கொள்கலனில் இரத்தமும் பிராணசக்தியும்

Read More »

இன்று ஒரு ஆசனம் (19) – தனுராசனம் (Bow Pose)

நாம் முன்னர் நின்ற தனுராசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் பார்க்க இருப்பது, பிடிலாசனத்தின் மாற்று ஆசனமான தனுராசனம். இதை படுத்த நிலையில் செய்ய வேண்டும். நின்ற தனுராசனம் போலவே தனுராசனத்தை பயிற்சி செய்வதன்

Read More »

இன்று ஒரு ஆசனம் (18) – பிடிலாசனம் (Cow Pose)

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat /

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்