பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தில் முக்கிய சக்கரங்களாக எட்டு சக்கரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்கள் என்பது நாளமில்லா சுரப்புகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
நாளமில்லா சுரப்புகளும் உயிர் வளர்ப்பும்
நாளமில்லா சுரப்புகள் தாங்கள் சுரக்கும் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் செலுத்துகிறது. இதன் விளைவாக ஹார்மோன்கள் உடலில் உள்ள பாகங்களில் உள்ள அணுக்களை அடைகின்றன. நாளமில்லா சுரப்புகளின் சீரான இயக்கமே உடல் மன நலத்துக்கான அடிப்படை.
நாளமில்லா சுரப்புகள் யாவை
நாளமில்லா சுரப்புகள் மற்றும் அவற்றின் முக்கியப் பணிகள்:
பீனியல் சுரப்பு
தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது
ஹைப்போதலாமஸ் சுரப்பு
உடல் வெப்பம், பசி மற்றும் தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தல்
பிட்யூட்டரி சுரப்பு
உடல் வளர்ச்சி மற்றும் மறு உற்பத்திக்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மூளை நலனைப் பாதுகாக்கிறது. பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. மிக முக்கியமாக அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்குப்படுத்துகிறது.
தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்புகள்
தைராய்டு சுரப்பு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது. உடலின் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் உடலின் ஆற்றலைப் பராமரிக்கிறது. பாராதைராய்டு சுரப்பு எலும்புகளிலும் இரத்தத்திலும் கால்சியம் அளவைப் பராமரிக்கிறது
தைமஸ் சுரப்பு
இச்சுரப்பு குழந்தைகள் பருவம் அடையும் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது T cell எனப்படும் ஒரு வெள்ளை இரத்த அணுவின் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களை சுரக்கிறது.
அட்ரீனல் சுரப்பு
இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு மற்றும் சிக்கலான நிலையில் தக்க முறையில் எதிர்வினை ஆற்றுவதற்கான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலின் உப்பு மற்றும் தண்ணீர் அளவுகளைப் பராமரிக்கிறது
கணையம் சுரப்பு
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, சீரணத்தை மேம்படுத்துகிறது
பாலியல் சுரப்புகள்
பிறப்பு உறுப்புகள் முழுமைப் பெற உதவுதல், உடலுறவில் நாட்டத்தை ஏற்படுத்துதல்
நாளமில்லா சுரப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் சில:
- உடல் வெப்பம்
- வளர்சிதை மாற்றம்
- உயிர் மறு உற்பத்தி
- பசி
- இருதயத் துடிப்பு, சுவாசம்
- இரத்த அழுத்தம்
- உடல் வளர்ச்சி
- உடலுறவு
- தூக்கம் விழிப்பு சுழற்சி
- சீரான மனநிலை, அதாவது மன அழுத்தம் தவிர்த்தல்
எட்டு சக்கரங்கள்
நம் உடலில் உள்ள எட்டு முக்கிய சக்கரங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பற்றி பார்ப்போம்:
சக்கரங்கள் | சுரப்புகள் | இடம் |
மூலாதாரம் | பாலியல் சுரப்புகள் | முதுகுத்தண்டின் கீழ் |
சுவாதிட்டானம் | அட்ரீனல் சுரப்பு | தொப்புளிலிருந்து 3 அங்குலம் கீழே |
மணிப்பூரகம் | கணையம் சுரப்பு | தொப்புள் மற்றும் மார்பெலும்புக்கு இடையில் உள்ள பகுதி |
அனாகதம் | தைமஸ் சுரப்பு | மார்பு மத்தி |
விசுத்தி | தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்புகள் | தொண்டை |
ஆக்ஞா | பிட்யூட்டரி சுரப்பு | புருவமத்திக்கு கீழ் |
குரு | ஹைப்போதலாமஸ் சுரப்பு | புருவமத்தி |
சகஸ்ராரம் | பீனியல் சுரப்பு | உச்சந்தலை |
பொதுவாக ஆக்ஞா சக்கரம் என்பது புருவமத்தியில் இருப்பதாகக் கூறுவர். ஆனால் திருமூலரின் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆக்ஞா என்பது புருவமத்திக்கு கீழும் குரு என்னும் சக்கரம் புருவமத்தியிலும் அமைந்திருக்கிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே.. – திருமூலரும் தமிழர்களின் தொன்மை மருத்துவமும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் என்று தமிழினத்தைப் பற்றிக் கூறுவது முற்றிலும் சரியானது என்பதற்கான முக்கியச் சான்றுகளில் ஒன்று திருமூலரின் திருமந்திரம்.
2-ம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞரான Galen பீனியல் சுரப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். பீனியலைப் பற்றி அவருக்கு முன்னரே சிலர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறும் அவர் அதன் செயல்பாடு விஷயத்தில் அவர்கள் கூற்றிலிருந்து முரண்பட்டு இதன் அமைப்பு மற்றும் சுற்றியுள்ள இரத்த நாளங்களுக்குத் துணையாய் இருக்கும் காரணங்களால் அதைத் தான் சுரப்பு என்று கருதுவதாகக் கூறுகிறார். அவரே அதன் அமைப்பு pine கொட்டையை ஒத்திருப்பதால் அதற்கு பீனியல் என்ற பெயரையும் வைக்கிறார். அவரின் மருத்துவ ஆய்வுகளின் தாக்கத்தை ஒட்டியே 17-ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்யும் நிலை நீடிக்கிறது.
19-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பீனியல் சுரப்பின் செயல்பாடுகள் பற்றிய் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பீனியல் சுரப்பு, ஆன்மாவின் இருப்பிடமாக, ஆன்மிகத் தெளிவுக்கான தொடர்பாக அடையாளப்படுத்தப்படும் மூன்றாவது கண்ணாக கருதப்படும் நிலை உருவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் பீனியல் ஒரு நாளமில்லா சுரப்பாக இருக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
20-ம் நூற்றாண்டில், 1958-ஆம் வருடத்தில்தான் பீனியல் சுரப்பு, தூக்கம் விழிப்பு சுழற்சியை (circadian rhythm-ஐ) முறைப்படுத்தும் மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கிறது என்று நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது.
ஆக, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கியத் தகவல்கள் என்னவென்றால்:
- பீனியல் பற்றி 2-ம் நூற்றாண்டிற்கு முன் சிலர் குறிப்பிட்டிருந்தாலும், பீனியல் ஒரு சுரப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது 2-ம் நூற்றாண்டில்தான். அப்பொழுது அதற்கு பீனியல் என்ற பெயரும் அதன் அமைப்பின் காரணமாக வைக்கப்படுகிறது.
- 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பீனியல் ஒரு நாளமில்லா சுரப்பாக இருக்கலாம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்பொழுதுதான் அது மூன்றாம் கண்ணாக, ஆன்மாவின் தொடர்பாக இருக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
- 20-ம் நூற்றாண்டில், 1958-ல்தான் பீனியல் ஒரு நாளமில்லா சுரப்பு என்பதும் அது மெலடோனின் என்கிற, தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனைச் சுரக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்படுகிறது.
நிற்க, நாம் ஏன் தமிழர்களைக் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று கூறுகிறோம்? ஒரு இனத்தின் மருத்துவம் எந்த அளவிற்குத் தொன்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் உடற்கூறு இயல் தொன்மையாக இருக்கும். அப்படிப்பட்ட இனம் மிகவும் தொன்மையானதாகத்தான் இருக்க முடியும்.
பண்டைய கிரேக்க அறிஞர்கள் தொடங்கி நவீன மருத்துவம் வரை பல நூற்றாண்டுகளாகப் பீனியல் பற்றிக் கண்டுபிடிக்க முயற்சித்துச் சென்ற நூற்றாண்டில் சில முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கும் பொழுது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர், தான் எழுதிய திருமந்திரத்தில் பீனியல் சுரப்புப் பற்றி மட்டுமல்லாமல் அதன் அமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விவரித்துள்ளார்:
- பீனியல் சுரப்பை திருமூலர் ஈசன் என்று குறிப்பிடுகிறார்.
- திருமந்திரத்தின் 14-வது பாடலில் ஈசனே, அதாவது பீனியல் சுரப்பே ஆழ்மனதின் வாயிலாக இருக்கிறது என்று கூறுகிறார்.
- 36-வது பாடலில் பீனியல் உயிர் தரும் அமிழ்தைச் சுரக்கிறது என்று கூறியிருக்கிறார். உயிர் தரும் அமிழ்தாக அவர் குறிப்பிடுவது மெலடோனின் பற்றியே.
- திருமந்திரத்தின் 16-வது பாடலில் பீனியல் அமைப்புப் பற்றிக் கூறுகையில் அது கூரான மேலிடத்தைக் கொண்டதாக இருக்கும் என்கிறார். மேலும், பீனியல், பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் ஆகிய மூன்றும் கொன்றைப் பூ நரம்பின் வடிவில் உள்ள அமைப்பின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார். அவர் கொன்றைப் பூ நரம்பின் வடிவு என்று கூறுவதைத்தான் நவீன மருத்துவம் corpus callosum என்று அழைக்கிறது.
கீழ் உள்ள கொன்றைப் பூவின் நரம்பின் படத்தைப் பார்க்கவும்:
நன்றி: https://www.feedipedia.org/node/325
Corpus callusum-ன் வடிவத்தைப் பார்க்கவும்.
நன்றி: https://sen842cova.blogspot.com/2018/01/corpus-callosum-anatomy.html
ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தன் நூலாகிய திருமந்திரத்தில் விளக்கியுள்ள உடற்கூறு இயலைப் பார்க்கும் பொழுது தமிழரின் தொன்மை வார்த்தைகளில் விவரிக்கவே இயலாத பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மேற்படி தகவல்கள் அனைத்தும் திருமூலரின் திருமந்திரத்தின் முதல் 50 பாடல்களுக்கு விளக்க உரை எழுதியுள்ள மரு. ச. இரா. தமிழரசு அவர்களின் ‘திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து என்ற புத்தகத்தை வாங்க எங்களை அணுகவும்.
தொலைபேசி எண்கள்: 9941221126, 9841770302
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .

மணிப்பூரக சக்கரத்தின் பலன்களும் மணிப்பூரக சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்
மனித உடலின் எட்டு (சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு பதிவைப் படிக்கவும்) முக்கிய சக்கரங்களில் மூன்றாவதாக உள்ள சக்கரம் மணிப்பூரகம் ஆகும். வடமொழியில் மணிப்பூர என்று அழைக்கப்படும் இச்சக்கரத்தின் பொருள் ‘பிரகாசமான நகை’ என்பதாகும்.

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்
சுவாதிட்டானம் மனித உடலின் முக்கிய சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் ஆகும். வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பதாகும்; அதாவது, ‘ஸ்வ’ என்றால் ‘ஒருவரின் சொந்த’ என்றும் ‘ஆதிஷ்டான’

மூலாதார சக்கரத்தின் பலன்களும் அதை இயங்க வைக்கும் முறைகளும்
மூலாதாரம் என்ற பெயரிலேயே இச்சக்கரத்தின் முக்கியத்துவம் விளங்கியிருக்கும். ‘மூலம்’ என்றால் ‘வேர்’ மற்றும் ‘ஆதாரம்’ என்றால் ‘அடிப்படை’ என்று பொருள். இதன் தன்மை மற்றும் அமைந்திருக்கும் இடம் காரணமாக இச்சக்கரம் மூலாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
4 Responses
உங்கள் முயற்சி…. பலருக்கு பயனளிக்கிறது. மிகவும் சிறப்பு எழுத்தாளர் அவர்களே!
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே. தொடர்ந்து அலைபேசியில் ஊக்கமளித்து வருகிறீர்கள், மிக்க நன்றி.
Dear sir, I am interested to learn more about the etymological root of kundalini Yoga and of the different chakras and the colours. I understand that the colour’s of the chakras are not related to the Rainbow colour’s at all.
Can you advice which books, articles, etc are online available in English to learn about kundalini yoga, chakras and the different colours?
Thank you for you effort and hope of hearing from you.
Yours sincerely
Shakoentela
Hello Sir, Thank you so much for connecting. Our ongoing work on Thirumoolar’s Thirumanthiram sheds light on how interpretations have changed in the course of thousands of years. As of now, it will difficult for us to point out the right books and articles for you from online sources. However, if you come across such books and articles, we hope you will drop a line for us to access them as well.
Regards
Rama Thamizharasu