உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (85) – சுப்த பாதாங்குஸ்தாசனம் (Reclining Hand-to-Big Toe Pose)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் படுத்த நிலையில் ஒரு காலின் பெருவிரலைப் பற்ற வேண்டும். இவ்வாசனம் ஆங்கிலத்தில் ‘Reclining Hand-to-Big Toe Pose’ மற்றும் ‘Supine Hand to Big Toe Pose’ என்று அழைக்கப்படுகிறது.

சுப்த பாதாங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக நிலையான தன்மை வளர்கிறது, படைப்பாற்றல் அதிகரிக்கிறது. பாதாங்குஸ்தாசனத்தில் கூறியுள்ளது போல கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டப் பாதைகள் செழுமையாக இயங்கி இவ்விரண்டு உறுப்புகளின் நலன்களும் பாதுகாக்கப்படுகிறது.

சுப்த பாதாங்குஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள்
 • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
 • அடி முதுகு வலியைப் போக்க உதவுகிறது
 • தோள் மற்றும் கைகளைப் பலப்படுத்துகிறது
 • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
 • வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
 • மலச்சிக்கலைப் போக்குகிறது
 • கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன் கால்களை நீட்சியடையச் செய்கிறது
 • கால் தசைகளை பலப்படுத்துகிறது
 • முட்டி வலியைப் போக்குவதுடன் கால் மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
 • சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது
 • குழந்தையின்மை குறைப்பாட்டைப் போக்க உதவுகிறது
செய்முறை
 • விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும்.
 • மூச்சை வெளியேற்றியவாறு வலது கால் முட்டி உங்கள் மார்பை நோக்கி வருமாறு வலது காலை மடிக்கவும்.
 • வலது கைவிரலால் வலது கால் பெருவிரலைப் பிடிக்கவும்.
 • மூச்சை உள்ளிழுத்தவாறு வலது காலை மேல் நோக்கி உயர்த்தவும். பாதம் மேல் நோக்கியும் புட்டமும் இடுப்பும் தரையிலும் இருக்க வேண்டும்.
 • 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
 • மூச்சை வெளியேற்றியவாறு காலை மடித்துப் பின் தரையில் நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.
 • இடது காலை உயர்த்தி மீண்டும் செய்யவும்.
குறிப்பு

கால் பெருவிரலைப் பிடிக்க முடியவில்லை என்றால் yoga strap-ஐ உயர்த்திய கால் பாதத்தில் சுற்றி கையால் பிடிக்கவும்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தலை மற்றும் கழுத்துக்கு அடியில் ஒரு மடித்த விரிப்பை வைத்து ஆசனத்தைப் பழகவும்.

தோள், இடுப்பு மற்றும் கால்களில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் முடிந்த அளவு மட்டுமே இவ்வாசனத்தைப் பழகவும்.

இன்று ஒரு ஆசனம் (86) – சலபாசனம் (Locust Pose / Grasshopper Pose)

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்களில் ஒன்றான சலபாசனம் அற்புதமான பலன்களைத் தரக்கூடியதாகும். வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது. சலபாசனம்,

Read More »

இன்று ஒரு ஆசனம் (84) – அர்த்த ஹலாசனம் (Half Plough Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக

Read More »

இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்