இன்று ஒரு ஆசனம் (76) – உத்கட கோணாசனம் (Goddess Squat)

இதற்கு முன் நாம் பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், பார்சுவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம், தண்டயமன பத்த கோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்கட கோணாசனம். வடமொழியில் ‘உத்கட’ என்றால் ‘பலம் நிறைந்த’ மற்றும் ‘தீவிரமான’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது. இடுப்புப் பகுதியை வலுவாக்கவும் விரிக்கவும் செய்யும் உத்கட […]

இன்று ஒரு ஆசனம் (63) – கருடாசனம் (Eagle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் விருஷாசனம் போன்றே ஒற்றைக் காலில் நின்று செய்யப்படுவது கருடாசனம். வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது. விருஷாசனம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது வெறும் கழுகு அல்ல; அதன் குணாம்சங்களே. கழுகு பயமில்லாதது; எதையும் எதிர் கொள்ளும் துணிவு கொண்டது. தன் இரை எவ்வளவு பெரிதாக, வலியதாக இருந்தாலும் பின்வாங்காமல் […]

இன்று ஒரு ஆசனம் (60) – பார்சுவோத்தானாசனம் (Intense Side Stretch Pose / Pyramid Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’ அல்லது ‘பக்கம்’, ‘உத்’ என்றால் ‘சக்தி வாய்ந்த’ என்றும் ‘தான்’ என்றால் ‘நீட்டுதல்’ என்றும் பொருள். அதாவது, பக்கவாட்டில் நன்றாக உடலை நீட்டுதல் என்பதாகும். இது ஆங்கிலத்தில் Intense Side Stretch Pose என்றும் Pyramid Pose என்றும் அழைக்கப்படுகிறது. பார்சுவோத்தானாசனம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததுதான். இது சகஸ்ராரம், விசுத்தி, மணிப்பூரகம், சுவாதிட்டானம் மற்றும் மூலாதாரம் ஆகிய அய்ந்து சக்கரங்களைத் தூண்டுகிறது. சகஸ்ராரச் சக்கரம் பிரபஞ்ச ஆற்றலோடு நம் ஆழ்மனதுக்கு தொடர்பை […]

தமிழ்