இன்று ஒரு ஆசனம் (96) – இராஜ புஜங்காசனம் (King Cobra Pose)

இதற்கு முன்னர் நாம் புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று பொருள். புஜங்காசனம் பற்றிய பதிவில் பாம்பின் பெயர் சூட்டப்பட்டதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (புஜங்காசனம் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இராஜ புஜங்காசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. எனவே, இவ்வாசனம் பயில்வதால் […]
இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், […]
இன்று ஒரு ஆசனம் (80) – இராஜ கபோடாசனம் (King Pigeon Pose)

கட ந்த இரண்டு நாட்களில் நாம் ஏக பாத இராஜ கபோடாசனம் மற்றும் அதோ முக கபோடாசனம் ஆகிய இரண்டு ஆசனங்களைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம். பின் வளையும் ஆசனங்களில் இது அற்புதமான மற்றும் சவாலான ஒரு ஆசனமாகும். நாம் முன்னரே அறிந்தது போல் ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ என்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்றும் பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் இராஜ கபோடாசனம் என்று அழைக்கப்படுகிறது. இராஜ கபோடாசனத்தில் அனாகதம், விசுத்தி, […]
இன்று ஒரு ஆசனம் (54) – திரிகோணாசனம் (Triangle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது திரிகோணாசனம். வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரின் பின்னால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. முக்கோண வடிவம் என்பது நிலையான தன்மைக் கொண்டதாகக் காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது. மூன்று என்ற எண் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று […]
இன்று ஒரு ஆசனம் (36) – பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் (Revolved Head-to-Knee Pose)

நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் ‘ஜானு’ என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் […]