இன்று ஒரு ஆசனம் (94) – மத்ஸ்யாசனம் (Fish Pose)

சர்வாங்காசனம், ஹலாசனம், சுப்த கோணாசனம் மற்றும் பத்ம ஹலாசனம் ஆகிய ஆசனங்களில் நாம் பின்னால் வளைந்தாலும் நம் முதுகு முன்புறம் வளைந்த நிலையில்தான் இருக்கும். ஆக, இவ்வாசனங்களுக்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது மத்ஸ்யாசனம். இந்த ஆசனம் பின்னால் வளைந்த நிலையில் செய்யப்படுகிறது; இவ்வாசனத்தில் முதுகும் பின்புற வளைவு பெறுகிறது. வடமொழியில் ‘மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’ என்று பொருள். மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Fish Pose என்று […]

இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது. சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் […]

இன்று ஒரு ஆசனம் (90) – சர்வாங்காசனம் (Shoulder Stand)

வடமொழியில் ‘சர்வ’ என்றால் ‘அனைத்தும்’ என்றும் ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் உடலின் எடையைத் தோள்களும் தலையும் தாங்கியிருக்கும். சர்வாங்காசனம் ஆசனங்களின் அரசி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Shoulder Stand என்று அழைக்கப்படுகிறது. சர்வாங்காசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா,  குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி வளர்கிறது; விசுத்தி சக்கரம் தொடர்பாடல் திறனை வளர்ப்பதுடன், தன் எண்ணங்களை, தன் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை […]

இன்று ஒரு ஆசனம் (88) – சதுஷ் பாதாசனம் (Four-Footed Pose)

இதற்கு முன் நாம் பார்த்த சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Four-footed Pose என்று அழைக்கப்படுகிறது. சதுஷ் பாதாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, நிலையான தன்மை, படைப்புத் திறன் வளர்கின்றன. அன்பும் கனிவும் வளர்கின்றன. பிரபஞ்ச சக்தியைக் கவரும் திறன் உருவாகிறது. […]

இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், […]

தமிழ்