இன்று ஒரு ஆசனம் (98) – த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம் (One Leg Folded Forward Bend)

வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ என்று பொருள். நாம் முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கும் பஸ்சிமோத்தானாசனத்தையும் ஜானு சிரசாசனத்தையும் ஓரளவு ஒத்த ஆசனமாகும். இது ஆங்கிலத்தில் One Leg Folded Forward Bend என்று அழைக்கப்படுகிறது. (பஸ்சிமோத்தானாசனம் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). (ஜானு சிரசானம் பற்றிப் பார்க்க, இந்தப் […]

இன்று ஒரு ஆசனம் (93) – பத்ம ஹலாசனம் (Lotus in Plough Pose)

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது. பத்ம ஹலாசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி,  ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இச்சக்கரங்கள் தூண்டப்படுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள் பற்றி நீங்கள் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். இச்சக்கரம் ஒவ்வொன்றின் சீராக இயக்கத்தால் ஏற்படும் விரிவான பலன்களை விரைவில் பார்க்கலாம். பத்ம […]

இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது. சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் […]

இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது பொதுவாக சர்வாங்கசனத்திற்குப் பின் செய்யப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose (Plow Pose) என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் வளர்கிறது; அன்பு, பரிவு […]

இன்று ஒரு ஆசனம் (89) – துவபாத தனுராசனம் (Bridge Pose on Elbows)

சேதுபந்தாசனத்தின் மாற்று முறை ஆசனத்தில் ஒரு வகையான சதுஷ் பாதாசனம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் துவபாத தனுராசனமும் சேதுபந்தாசனத்தின் ஒரு மாற்று வகையாகும். வடமொழியில் ‘துவ’ என்றால் ‘இரண்டு’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘பாதம்’ மற்றும் ‘தனுர்’ என்றால் ‘வில்’ என்று பொருள். இவ்வாசனம் ஒரு வகையில் தனுராசனத்தின் ஒரு வடிவமாகவும் கருதப்படலாம். துவபாத தனுராசனம் ஆங்கிலத்தில் Bridge Pose on Elbows என்று அழைக்கப்படுகிறது. துவபாத தனுராசனத்தில் எட்டு முக்கிய […]

தமிழ்