When A Pet Becomes A Part of Your Life

சில மாதங்களாகத் தொடர்ந்து பதிவுகளை உருவாக்கவும் வெளியிட முடியாமலும் போனதற்கான முக்கிய காரணம், எங்கள் வீட்டின் புதிய உறுப்பினரான எங்களின் செல்லப்பிராணி. சரி, முக்கிய காரணம் அதுவென்றால் மீதி காரணங்கள் என்ன என்று கேட்கிறீர்களா. எங்களின் புது வரவுதான் மீதி காரணங்களும். ஆம், எங்கள் வீட்டின் புதிய வரவு எங்கள் மனங்களையும் நேரத்தையும் தடாலடியாக ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களின் உடற்பயிற்சி நேரம் முதல் எங்களின் ஓய்வு நேரம் வரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தது […]
Every Dawn is a New Beginning

சிறு வயதில் மழை நாட்களில் பள்ளிக்கூடத்துக்குக் ‘குடைவெளியில்’ நனைந்து சென்ற போதும், சென்ற பின் விடுமுறை அளிக்கப்பட்டு நனைந்தே வீட்டுக்கு வந்த போதும் மனதில் மழை தந்த உற்சாகம்தான் நிரம்பியிருந்தது. இதில் பல நாட்கள் விடுமுறை அறிவித்த பின் மழை நின்று வெயில் அடித்ததும் உண்டு. மழை பற்றிய வானொலி அறிவிப்புகளும், புயல் அபாய எச்சரிக்கைகளும், அம்மா கொடுத்த சூடான பஜ்ஜிகளும் மழை நாட்களில் அதிக மழையையும் மேலும் பலத்த காற்றையும் எதிர்பார்க்கவே வைத்தன. ஆனால், இந்த […]
Work-Life Balance

சூரிய உதயத்திற்கு முன் கண் விழித்து, பயிற்சி செய்து, சமைத்து, சாப்பிட்டு, அல்லது சமைக்காமல் சாப்பிட்டு, அலுவலக வேலையில் அன்றைய நாளுக்கான target, deadline, last date மற்றும் என்ன பெயர் எல்லாம் இருக்கிறதோ அத்தனையும் வைத்து வேலையின் பரபரப்பில் மூழ்குபவர்களில் நீங்களும் ஒருவரென்றால் ஒரு நொடி கணினியிலிருந்து விரல்களை எடுத்துக் கையை உயர்த்துங்கள். இருங்கள், நானும் உயர்த்திக் கொள்கிறேன். பரபரப்பான பணிச்சுமையும் சவாலான வேலைகளும் பல வேளைகளில் மனதுக்குப் பிடித்தாலும் நாம் அந்த வேலையின் போக்கில் […]
Today

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இவை அழகான புகைப்படங்கள் அல்லவென்றாலும் மிக அழகான நொடிகள். மொட்டை மாடியில் பயிற்சி செய்வதில் பல அனுகூலங்கள் இருந்தாலும், இந்த இயற்கை சில வேளைகளில் அபாரமாக மனதை திசைத் திருப்பி விடுகிறது. இன்று காலை தாய்ச்சி பயிற்சி முடித்து கீழே இறங்கத் தயாரான நொடியில் இந்த காட்சி கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. மரம் பாதி சூரியனை கபளீகரம் செய்தாற் போலிருந்தது… புகைப்படம் எடுத்த பின் சற்று நகர்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது, பாதி […]
Magical Evening...

yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. நிச்சயமாக இது வானஜாலம் பற்றியதுதான் என்று எண்ணி, பதிவை மறந்து மாடிக்கு விரைந்தேன். இதோ பதிவு, ஆனால், திட்டமிட்டது அல்ல, இயற்கை இன்று திட்டமிட்டதுதான் பதிவேற்றம் ஆகிறது. முதலில் கண்ணில் கண்ட காட்சி: ஒரு புறம் இப்படி: மறுபுறம் இப்படி: “பற […]