இன்று ஒரு ஆசனம் (85) – சுப்த பாதாங்குஸ்தாசனம் (Reclining Hand-to-Big Toe Pose)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் படுத்த நிலையில் ஒரு காலின் பெருவிரலைப் பற்ற வேண்டும். இவ்வாசனம் ஆங்கிலத்தில் ‘Reclining Hand-to-Big Toe Pose’ மற்றும் ‘Supine Hand to Big Toe Pose’ என்று அழைக்கப்படுகிறது. சுப்த பாதாங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் […]
இன்று ஒரு ஆசனம் (84) – அர்த்த ஹலாசனம் (Half Plough Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது; தன்மதிப்பு வளர்கிறது; தன்னம்பிக்கை வளர்கிறது. அர்த்த ஹலாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது மலச்சிக்கலைப் போக்குகிறது தொப்பையை கரைக்கிறது இடுப்புப் பகுதியை […]
இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், […]
இன்று ஒரு ஆசனம் (82) – சேதுபந்தாசனம் (Bridge Pose)

படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புறம் இழுக்கும் ஆற்றலும் ஒரு பாலத்தை பலமாக வைக்க உதவுவது போல், சேதுபந்தாசனத்தில் வயிற்றுப் பகுதி அழுத்தம் பெறுவதோடு முதுகுத்தண்டு பகுதி நீட்சியடைந்து உடல் பலம் பெறுகிறது. சேதுபந்தாசனம் ஆங்கிலத்தில் Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. சேதுபந்தாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், […]
இயற்கை அழகில்…

82-வது நாள் ஆசனத்துக்கான பதிவு தயாராக இருந்தாலும், இன்று வானத்தில் கண்ட காட்சியைப் பகிரும் எண்ணம் ‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியை ஒரு நாள் ஒத்திப் போட வைத்திருக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நம் கண் முன்னே இருக்கக்கூடிய அற்புதமான காட்சிகளைக் காணத் தவறிவிடுகிறோம். காலை நேரத்து பறவை ஒலியை இரசிப்பதை விட குக்கரின் விசில் சத்தத்தில் மனம் கவனம் செலுத்துகிறது. அவசரகதியில் இயங்கத் தேவையான வாழ்க்கை சூழலில் இது இயல்பானதுதான். ஆனாலும், சில நிமிடங்களை ஒதுக்கி […]