இன்று ஒரு ஆசனம் (70) –அஷ்வ சஞ்சாலனாசனம் (Equestrian Pose)

அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும். வடமொழியில் ‘அஷ்வ’ என்றால் ‘குதிரை’, ‘சஞ்சாலன்’ என்றால் ‘ஒரு செயலில் ஈடுபடத் துவங்குவதற்கான நடவடிக்கை’ என்று பொருள். இது குதிரை ஏற்றத்துக்கான தயார்நிலை என்பதால் அஷ்வசஞ்சாலனாசனம் என்று பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Equestrian Pose என்று அழைக்கப்படுகிறது. அஷ்டசஞ்சாலனாசனத்தில் சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்கள் […]

பாடல்களாக என்றும் எஸ்.பி.பி

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடுவதை நிறுத்திக் கொண்டார். இது போன்ற ஒரு குரல் ஆளுமை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. அடங்கியிருக்கக் கூடாத குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் மவுனமாகிப் போன இராகம் எத்தனை மொழிகளில் பாடினாலும் தமிழ்நாட்டின் அடையாளமாகவே விளங்கினார். இசைத்துறையின் ஆளுமையாக இருந்தாலும், பெருந்தன்மை, கனிவு நிறைந்த சிறந்த மனிதர் என அடையாளம் பெற்றிருந்தவர். அந்த நல்ல மனிதனின் மறைவையொட்டி, ‘இன்று ஒரு ஆசன’த்தை நாளைக்குத் தள்ளி வைப்போம்.

இன்று ஒரு ஆசனம் (69) –அஷ்ட சந்திராசனம் (High Lunge Pose / Crescent High Lunge Pose)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள்; ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது. அஷ்ட சந்திராசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது முதுகுத் தசைகளை […]

யோகா குறித்த கேள்வி பதில் – பகுதி 2

நேற்றைய தினம் யோகா குறித்த சில கேள்விகளைப் பார்த்தோம். இன்று மேலும் சில கேள்விகள் மற்றும் அவற்றிற்கான விடைகளை பார்ப்போம். 11) மெத்தையில் ஆசனம் பயிலலாமா? சம தரையில் விரிப்பு அல்லது yoga mat போட்டு அதன் மேல் ஆசனம் செய்வதே சிறந்தது. உடல் நிலை பிரச்சினையால் தரையில் உட்கார முடியாத சூழலில் அவசியமான மற்றும் சாத்தியமுள்ள ஆசனங்களை மெத்தையில் பயிலலாம். 12) முதலில் செய்ய வேண்டியது யோகாவா பிராணாயாமமா? முதலில் யோகாசனங்கள் செய்து முடித்து, பின் […]

யோகா குறித்த கேள்வி பதில்

நாம் இரண்டு மாதங்களுக்கும் சற்று அதிகமாக யோகாசனங்கள், அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி பார்த்து வந்திருக்கிறோம். புதிதாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு யோகா குறித்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்றைய தினம் கேள்வி பதில் பகுதி பதிவேற்றம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் பதிலளிக்கப்பட்டுள்ள கேள்விகளைத் தவிர்த்து வேறு கேள்விகள் உங்களுக்கு இருப்பின், கீழ் உள்ள மறுமொழிக்கான பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கவும். 1) யோகா என்பது ஒரு மதமா? உடலை நலமாக வைத்திருக்க, உடல் எடை […]

தமிழ்