கருத்துக் கணிப்பு
அன்புள்ள வாசகர்களே, yogaaatral.com பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கு எங்களின் நன்றி. இன்றைய தினம் நாங்கள் ஒரு சிறு கருத்துக் கணிப்புக்கான கேள்விகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறோம். இதில் உங்கள் பதில்களைப் பதிவிட சில நிமிடங்களே ஆகும். உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.
இன்று ஒரு ஆசனம் (62) – உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் (Extended Hand to Big Toe Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் நாம் பாதாங்குஸ்தாசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். நின்று செய்யும் அந்த ஆசனத்தில் நாம் முன்னால் குனிந்து கால் பெருவிரல்களைப் பிடிப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தில் நாம் நின்றவாறு பெருவிரலைப் பற்றி ஒரு காலை மட்டும் உயரத் தூக்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘ஹஸ்த’ என்றால் ‘கை’, ‘பாத’ என்றால் ‘பாதம்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்று பொருள். ஆக, இது கையால் கால் பெருவிரலைப் பற்றி காலை […]
இன்று ஒரு ஆசனம் (61) – விருக்ஷாசனம் / Tree Pose Benefits, Steps and Precautions for Beginners

வடமொழியில் ‘விருஷ’ என்றால் மரம். உடலை ஒற்றைக் காலில் தாங்கி நிற்கும் இவ்வாசனத்தைப் பயில்வதால் நம் மனமும் உடலும் சமநிலையை அடைவதால் இது விருஷாசனம் என்ற பெயர் பெற்றது. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Tree Pose என அழைக்கப்படுகிறது. விருஷாசனம், மூலாதாரம், சுவாதிட்டானம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதாரம் நிலையான தன்மையை அளிக்கிறது, சுவாதிட்டானம் படைப்புத் திறனை அதிகரிக்கிறது; ஆக்ஞா சக்கரம் தெளிவான மன நிலையையும் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கிறது. […]
இன்று ஒரு ஆசனம் (60) – பார்சுவோத்தானாசனம் (Intense Side Stretch Pose / Pyramid Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’ அல்லது ‘பக்கம்’, ‘உத்’ என்றால் ‘சக்தி வாய்ந்த’ என்றும் ‘தான்’ என்றால் ‘நீட்டுதல்’ என்றும் பொருள். அதாவது, பக்கவாட்டில் நன்றாக உடலை நீட்டுதல் என்பதாகும். இது ஆங்கிலத்தில் Intense Side Stretch Pose என்றும் Pyramid Pose என்றும் அழைக்கப்படுகிறது. பார்சுவோத்தானாசனம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததுதான். இது சகஸ்ராரம், விசுத்தி, மணிப்பூரகம், சுவாதிட்டானம் மற்றும் மூலாதாரம் ஆகிய அய்ந்து சக்கரங்களைத் தூண்டுகிறது. சகஸ்ராரச் சக்கரம் பிரபஞ்ச ஆற்றலோடு நம் ஆழ்மனதுக்கு தொடர்பை […]
இன்று ஒரு ஆசனம் (59) – சதுரங்க தண்டாசனம் (Four-Limbed Staff Pose / Low Plank Pose)

முந்தைய பதிவு ஒன்றில் கும்பக ஆசனம் (High Plank Pose) பற்றி பார்த்திருக்கிறோம். இன்றைய ஆசனமான சதுரங்க தண்டாசனத்தின் ஒரு வடிவமே கும்பக ஆசனம். ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் கும்பக ஆசனத்தைத் தொடர்ந்து பயின்ற பின் சதுரங்க தண்டாசனத்தைப் பழகலாம். வடமொழியில் ‘சதுர்’ என்றால் ‘நான்கு’, ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்று பொருள். ‘தண்ட’ என்பதற்குக் ‘கம்பு’ என்பது பொதுவான பொருளாக இருந்தாலும், இங்கு ‘தண்ட’ என்பது முதுகுத்தண்டைக் குறிப்பதாகும். இது ஆங்கிலத்தில் Low Plank Pose […]