இன்று ஒரு ஆசனம் (58) – வீரியஸ்தம்பன் ஆசனம் (Virya Stambhan Pose)

வடமொழியில் ‘வீரிய’ என்றால் ‘பலம்’ என்று பொருள்; ‘ஸ்தம்பன்’ என்பது முதுகுத்தண்டைக் குறிக்கும். ஆக இது முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் ஆசனமாகும். ‘வீரிய’ என்ற சொல்லுக்கு ‘விந்தணு’ என்ற பொருளும் உண்டு. வீரியஸ்தம்பன் ஆசனம் பயில்வதால் விந்தணு பெருகும். வீரிய ஸ்தம்பன் ஆசனம் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. இச்சக்கரம் தூண்டப் பெறுவதால் படைப்புத் திறன் மேம்படும், மகிழ்ச்சி பெருகும், உடலுறவு சார்ந்த கோளாறுகள் நீங்கும். பிறருடனான உறவில் நேர்மையும் நம்பகத்தன்மையும் வளரும். வீரிய ஸ்தம்பன் ஆசனத்தின் மேலும் சில […]

இன்று ஒரு ஆசனம் (57) – அர்த்த பிண்ச மயூராசனம் (Dolphin Pose)

நம் முந்தைய பதிவு ஒன்றில் அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பிண்ச’ என்றால் ‘இறகு’, ‘மயூர’ என்றால் ‘மயில்’. இதை மொழிபெயர்க்கும் போது பாதி இறகு மயிலாசனம் என்பதாக இருக்கும். இது ஆங்கிலத்தில் Dolphin Pose என்று அழைக்கப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிண்ச மயூராசனத்துக்கும் பொருந்தும். மிகுந்த ஆற்றலைத் தரும் இவ்வாசனம் […]

இன்று ஒரு ஆசனம் (56) – உத்தித திரிகோணாசனம் (Extended Triangle Pose)

நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’ என்று பொருள், அதாவது, இது காலை நன்றாக நீட்டிய நிலையில் செய்யப்படும் திரிகோணாசனம், அதாவது, உத்தித திரிகோணாசனம். இது ஆங்கிலத்தில் Extended Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது. உத்தித திரிகோணாசனத்தின் […]

இன்று ஒரு ஆசனம் (55) – பரிவ்ருத்த திரிகோணாசனம் (Revolved Triangle Pose)

பரிவ்ருத்த திரிகோணாசனம்

வடமொழியில் ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்றும், ‘த்ரி’ என்றால் ‘மூன்று’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி வந்து மறுபக்க காலைப் பிடிப்பதால் இந்தப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. திரிகோணாசனத்தில் கூறப்பட்டுள்ளது போல், பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகச் சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாக நிலையான […]

இன்று ஒரு ஆசனம் (54) – திரிகோணாசனம் (Triangle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது திரிகோணாசனம். வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரின் பின்னால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. முக்கோண வடிவம் என்பது நிலையான தன்மைக் கொண்டதாகக் காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது. மூன்று என்ற எண் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று […]

தமிழ்