உடல் மன ஆரோக்கியம்

சிறுதானிய வகைகளும் அவற்றின் நன்மைகளும்

நவீனமயமான உலகில், காலம் மற்றும் சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகி இருக்கிறது. அதிகாலையிலேயே விழித்து அந்நாளுக்குரிய வேலைகளில் ஈடுபட்டதும், பல மைல் தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்துக்கு நடந்தே சென்று படித்ததும், அலுவலக வேலைக்கு அதிகப்பட்ச வசதியாக மிதிவண்டியில் போனதும், இரவு உணவை பொழுது சாயும் முன் உண்டு, சரியான நேரத்தில் உறங்கி, அலாரம் வைக்காமலேயே சரியான நேரத்தில் விழித்த தலைமுறையினர் வழிவந்தவர்கள் காலத்திற்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும். விவசாயம் சார்ந்த வேலைகள் என்பதிலிருந்து நவீனதொழில்மயமான பணிகளுக்கு மனிதர்கள் மாறும் போது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்வது தவிர்க்க முடியாமல்தான் போகிறது. ஆனால், எந்த காலத்திலும் எந்த சூழலிலும் மாறாதிருக்க வேண்டியவைகளில் ஒன்று உணவு முறை.

உண்ணுதல் என்பது வெறும் ருசிக்கானது அல்ல. உண்ணுதல் உயிர் வாழ்தலுக்காக; உடல், மன நலத்தோடு உயிர் வாழ்தலுக்காக. உயிர் ஆற்றலைப் பெறவும், உடல், மன நலத்தோடு வாழவும் தேவையான சத்து உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது. “You are what you eat” என்ற சொல்லாடல் பல கலாச்சாரங்களிலும் பரவலாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. அதாவது, உங்கள் உணவைப் பொறுத்தே உங்கள் உடல் நலம் மட்டுமல்ல, உங்கள் குணாம்சமும் கூட. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மண் சார்ந்த, மரபு வழி சார்ந்த உணவுகளை உண்ட மனிதர்கள் இயல்பாகவே நலமானவர்களாகவும், பலமானவர்களாகவும் இருந்தார்கள். மேலும் தங்களின் மண்ணுக்கேற்ற பண்புகளோடும் வாழ்ந்தார்கள். மண்ணுக்கேற்ற உணவும் மண்ணுக்கேற்ற மருத்துவமும் என்பதுதான் சரியான வாழ்க்கை முறையும் நலமான வாழ்விற்கு வழியுமாகும்.

ஒரு பகுதியின் தட்பவெப்ப சூழலுக்கேற்ற பயிர்களே அங்கு செழிப்பாக வளர்கின்றன. அத்தகைய உணவுப் பயிர்களே அந்த மண்ணின் மக்களுக்கான உணவாகும். நம் முன்னோர்களின் உணவுமுறையில் மிக முக்கிய இடம் பெற்றிருந்த சிறுதானியங்கள் அவ்வாறே நம் மண்ணின் பயிராகும். இந்த சிறுதானியங்கள் விளைவதில் சிறப்பமசம் என்னவென்றால் இவை மழை பொழியாவிட்டாலும் நன்கு வளரக் கூடியவை. நாம் ஒரு நாளில் ஒரு வேளையாவது சிறுதானிய உணவுகளை உட்கொள்ளுவது நம் உடல், மன நலனை மிகவும் மேம்படுத்துவதாக அமையும்.

சிறுதானிய வகைகள்

சிறுதானியங்கள் பொதுவாக எட்டு வகைப்படும். அவை:

  • திணை
  • வரகு
  • பனிவரகு
  • சாமை
  • கம்பு
  • கேழ்வரகு
  • சோளம்
  • குதிரைவாலி

சிறுதானியங்களின் சமீபத்திய விலைப்பட்டியலை அமேசானில் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சிறுதானியங்களின் பொதுவான நன்மைகள்

ஒவ்வொரு சிறுதானிய வகைக்கும் சில குறிப்பிட்ட நன்மைகள் உண்டு.  சிறுதானியங்களின்  நன்மைகளில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

  • மலச்சிக்கல் நீங்குகிறது
  • செரிமானம் தூண்டப்படுகிறது
  • நோய் எதிர்ப்புத் திறன் மேம்படுகிறது
  • மூளைத் திறன் வளர்கிறது
  • இதய நலன் மேம்படுகிறது
  • கல்லீரல் நலன் பாதுகாக்கப்படுகிறது
  • சீரான உடல் எடை பராமரிக்கப்படுகிறது
  • இரத்த சோகை நீங்குகிறது
  • தசைகள் பலம் பெறுகின்றன
  • நரம்புகள் வலுவடைகின்றன
  • எலும்பு நலன் மேம்படுகிறது
  • கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் குணமாகின்றன
  • மாதவிடாய் கோளாறுகள் நீங்குகின்றன
  • உடலில் சர்க்கரை அளவு சீராகிறது
  • அதிகக் கொழுப்பு சரியாகிறது
  • மூட்டு வலி குணமாகிறது
  • குடல் புண் குணமாகிறது
  • குடல் பலமடைகிறது

மேலும், சிறுதானியங்களில் பெரும்பாலான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. சமச்சீரான உணவின் மூலமாக உடல், மனதுக்குத் தேவையான ஆற்றலைப் பெற அமினோ அமிலங்கள் அவசியமானவை. 

சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான அவசியத் தேவைகளில் ஒன்றாகும்.

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://hiiamchezhi.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

கொழுப்பு சத்தின் நன்மைகளும் கொழுப்பு குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவுகளில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் புரதச் சத்தின் நன்மைகள் குறித்து பார்த்தோம். இன்று கொழுப்புச் சத்தின் நன்மைகள் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர் உணவின் நன்மைகள்

Read More »

புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர்

Read More »

கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள்

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய எங்களின் முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சமச்சீர் உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான கரிநீரகியின் அவசியம், கரிநீரகி குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்