உடல் மன ஆரோக்கியம்

கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள்

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய எங்களின் முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சமச்சீர் உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான கரிநீரகியின் அவசியம், கரிநீரகி குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கரிநீரகி உணவு வகைகள் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம்.

கரிநீரகியின் முக்கியத்துவம்

Source: Photo by Vie Studio: https://www.pexels.com/photo/a-white-rice-on-a-wooden-spoons-7421198/

உடலுக்கு அதிக அளவில் தேவைப்படும் பேரூட்டச்சத்துகளில் ஒன்றான கரிநீரகி, உடலின் ஆற்றலுக்கு அத்தியாவசியமானது. ஒவ்வொரு கிராம் கரிநீரகியும் 4 கலோரிகளைத் தருகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள கரிநீரகியை, நமது சீரண மண்டலம், மூளை, இருதயம், தசைகள் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுக்கு  ஆற்றல் தரும் முதன்மையான மூலமான க்ளூகோஸாக மாற்றுகிறது. மேலும், கரிநீரகி, செரிமான இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

எளிய கரிநீரகியும் பல்கூறு கரிநீரகியும் (Simple Carbohydrates and Complex Carbohydrates)

எளிய கரிநீரகி மற்றும் பல்கூறு கரிநீரகி ஆகியவை கரிநீரகியின் இரண்டு பிரிவுகளாகும். உணவின் இரசாயன அமைப்பு மற்றும் அது எவ்வளவு விரைவாக உடலால் சீரணிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அது எளிய கரிநீரகி அல்லது பல்கூறு கரிநீரகி என வகைப்படுத்தப்படுகிறது.

எளிய கரிநீரகி உடலால் சீக்கிரம் சீரணிக்கப்படுகிறது. அதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக, அதே சமயத்தில் அதிக அளவிலும் கூடுகிறது. பல்கூறு கரிநீரகி மெதுவாக சீரணிக்கப்பட்டு, இரத்தத்தில் க்ளுகோஸை மெதுவாக வெளிவிடுகிறது.

அதிக அளவில் எடுக்கப்படும் எளிய கரிநீரகி உடல், மன நலத்திற்கு ஏற்றதல்ல என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகையான கரிநீரகியின் பயன்கள் பற்றிய ஆய்வொன்றை படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். அறிவிக்கிறது.

கரிநீரகியின் வகைகள்

சர்க்கரை, மாச்சத்து மற்றும் நார்சத்து ஆகிய மூன்றும் கரிநீரகியின் வகைகளாகும்.

சர்க்கரை எளிய கரிநீரகி வகையைச் சேர்ந்தது. உதாரணம்: சர்க்கரை, சோடா.

மாச்சத்து மற்றும் நார்ச்சத்து, பல்கூறு கரிநீரகி வகையைச் சேர்ந்தவை. உதாரணம்: அரிசி, நார்சத்து அதிகமுள்ள காய்கள் மற்றும் பழங்கள்.

கரிநீரகியின் பயன்கள்

கரிநீரகியின் முக்கிய பலன்களில் சில:

  • உடலுக்கு ஆற்றலைத் தருகிறது
  • மூளை, தசைகள், மத்திய நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்துக்கு ஆற்றல் அளிக்கிறது.
  • சீரணத்தை மேம்படுத்துகிறது.
  • Complex carbs-ஆன dietary fiber இருதய நலனைப் பாதுகாக்கிறது.
  • சரியான முறையில் எடுத்தால் அதிக கொழுப்பை நீக்க உதவி செய்கிறது.
  • கரிநீரகி மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
தினசரி கரிநீரகி எடுக்க வேண்டிய அளவு

பொதுவாக, நாம் உண்ணும் உணவில் 45% முதல் 60% வரை கரிநீரகி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள்

தேவையை விட குறைவாக கரிநீரகி எடுப்பதால் உடல், மன நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. கரிநீரகி பற்றாக்குறையின் அறிகுறிகளில் சில:

  • செரிமானக் கோளாறு
  • மலச்சிக்கல்
  • உடல் சோர்வு
  • வேலையில் கவனம் செலுத்த இயலாமை
  • உணவு உண்ட சிறிது நேரத்தில் பசி உணர்வு தோன்றுதல்
  • சத்து குறைபாடு
  • வாய் துர்நாற்றம்
  • எரிச்சல், கோபம், பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள்
கரிநீரகி அதிகமுள்ள உணவுகள்

நாம் உண்ணும் உணவின் பெரும்பங்கு அரிசி சோறாக இருக்கும் பட்சத்தில், நம் கரிநீரகி தேவையில் பெரும்பாலான அளவையோ அதற்கும் அதிகமாகவோ அரிசியிலிருந்தே பெறுகிறோம். அவ்வாறில்லாமல், கரிநீரகியை வேறு சில உணவுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் போதுதான் பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.

இதோ, கரிநீரகி அதிகமுள்ள உணவுகளில் சில:

  • வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி, சிறு தானியங்கள், கோதுமை, சீமை திணை (quinoa), ஓட்ஸ் முதலிய முழு தானியங்கள்
  • பருப்பு மற்றும் பயறு வகைகள்
  • வாழைப்பழம்
  • ஆப்பிள்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • உருளைக்கிழங்கு
  • வெள்ளை பாஸ்தா
  • முழு தானிய ரொட்டி

தினசரி உணவில் கரிநீரகியை குறிப்பிட்ட அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆற்றலைப் பெறலாம்.

குறிப்பு: குறிப்பிட்ட வகை கரிநீரகியை உணவில் சேர்க்கவும் தவிர்க்கவும் உதவும் பல்வேறு உணவுக் குறிப்புகள் கொண்ட புத்தகங்கள் இணையதளத்தில் விற்கப்படுகின்றன. அது போலவே, கரிநீரகி எடுப்பதை குறைக்கும் தேவையில் உள்ளவர்களுக்கு உதவக் கூடிய குறைந்த அளவு கரிநீரகி உணவு முறை பற்றிய புத்தகங்களும் இணையத்தில் விற்கப்படுகின்றன. 

உணவு சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்